வெஸ்டனில் பிறந்த குழந்தை படுகொலை… ஆண், பெண் என இருவர் கைது!

Weston, baby death, கொலை, குழந்தை
(Image: BBC)

வெஸ்டனில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆண், பெண் என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெஸ்டன் விக்டோரியா குவாட்ரண்டில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அவான் மற்றும் சோமர்செட் போலீசார் அங்கு வந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தை யாருடையது என்று போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். போலீசாரின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் கண்டுபிடிக்கப்பட்டார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

குழந்தை எப்படி இறந்தது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக ஆண், பெண் என இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா: புதன்கிழமை அதிகாலை 12.01 மணிக்கு மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்லும் லண்டன்!

அவர்கள் யார், குழந்தையின் பெற்றோரா, உறவினரா, எதனால் இந்த கொலை நடந்தது என எந்த ஒரு தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. விசாரணை நடந்து வருகிறது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ரிச்சியோ கூறுகையில், “கைது செய்யப்பட்ட இருவரும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொலை சமூகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த குழந்தை எப்படி இறந்தது என்று விசாரணை நடத்தியதில் இது ஒரு மிகமோசமான படுகொலை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம்.

இந்த வார இறுதியில் குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்படும். அதற்கு முன்னதாகவே கொலைக்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்துவிடுவோம்.

எங்கள் ரோந்து அதிகாரிகள் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் தயவு செய்து ரோந்துக்கு வரும் அதிகாரியை நிறுத்திப் பேசுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter