லண்டனிலேயே கஞ்சா செடி வளர்ப்பு… அதிர்ச்சியில் போலீஸ்!

Cannabis
வீட்டில் ரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடி (Image: Met Police)

லண்டன் சவுத்வார்க்கில் ஒரு குடியிருப்பு பகுதியில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட போது 250க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போதை பொருட்கள் விற்பனை அதைத் தொடர்ந்து ஏற்படும் வன்முறைகள், கத்திக்குத்து, கொலைகள் லண்டன் உள்பட இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பல பண்ணைகளில் அறைகளுக்குள் மிக ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வப்போது கஞ்சா செடி வளர்ப்பு பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்த நிலையில் லண்டன் சவுத் வார்கில் ஒரு குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையின் இன்று (ஆகஸ்ட் 19) அதிகாலை நேரத்தில் சென்ட்ரல் சவுத் வயலன்ஸ் சப்ரஷன் யூனிட் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அந்த குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு 250 தொட்டிகளில் கஞ்சா போன்ற செடி வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டறிந்தனர். அது கஞ்சா செடிதானா என்று உறுதியாக தெரியாத நிலையில் ஆய்வுக்காக அதை அனுப்பியுள்ளனர்.

கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த குற்றம் தொடர்பாக 50 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சென்ட்ரல் சவுத் வயலன்ஸ் சப்ரஷன் பிரிவின் பிசி லூக் வென்ஹாம் கூறுகையில், “சவுத் வார்கில் நாங்கள் எதிர்பார்த்தது போன்று மிகப் பெரிய அளவில் பி போதை மருந்தைக் கண்டறிந்துள்ளோம். இங்கிருந்து சவுத் வார்க் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மருந்து விற்பனை நடந்துள்ளது.

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு இந்த போதை மருந்து பயன்பாடுதான் காரணம் என்பதை அறிவோம். தற்போது இங்கு கஞ்சா செடி வளர்ப்பு கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகலை மக்கள் போலீசாருக்கு வழங்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க பொது மக்களிடம் இருந்து வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. போலீசாருடன் பேச விரும்பவில்லை என்றால் 0800 555 111 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். இது முழுக்க முழுக்க சுதந்தரமான தன்னார்வ இயக்கம். இதில் தகவல் சொல்லும்போது உங்கள் பெயர், விவரங்களைக் கேட்க மாட்டார்கள். அழைப்பு எங்கிருந்து வந்தது என்று கண்டறியமாட்டார்கள். எனவே நம்பி சொல்லலாம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk