கோவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசி தாமதம் ஏன்? – அமைச்சர் விளக்கம்

uk covid 19 vaccines

COVID-19 தடுப்பூசிகளின் இரண்டாவது அளவை தாமதப்படுத்தும் பிரிட்டனின் முடிவு, முதல் கட்ட தடுப்பூசி அதிக மக்களுக்கு கிடடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர், “இதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எங்களது வாதம் மிகவும் தெளிவானது, நேரடியானது.

முதல்கட்ட கொரோனா தடுப்பூசி அதிக உயிர்களைக் காப்பாற்ற உதவும். மக்களுக்கே இதுவே இப்போது தேவையானதாகும்” என்றார்.

மேலும், ‘முதல்கட்ட தடுப்பூசி முழுவதும் போடப்பட்ட பிறகு, இரண்டாம் கட்ட அளவிலான தடுப்பூசிகள் 12 வாரங்கள் வரை வழங்கப்படும்.

முதல் கட்ட தடுப்பூசி காரணமாக குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது’ என்றும் கூறினார்.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 62,322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுடன், உயிர் பலி 1000ஐ கடந்தது குறிப்பிடத்தக்கது.