பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தனிமைப்படுத்தல் நீட்டிப்பு

borris johnson quarantine extends corona virus

கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது தனிமையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வாரம் நான் தனிமையில் இருந்து வருகிறேன். தற்போது நலமாக இருந்தாலும் கொஞ்சம் காய்ச்சலும், சில அசவுகரியங்களும் உள்ளது. அரசு அதிகாரிகள் ஆலோசனையின்படி நான் எனது தனிமையை நீட்டிக்க முடிவு செய்துள்ளேன். அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் சரியாக நடந்து வருகிறது.

மக்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள், யாரும் வெளியே செல்ல வேண்டாம். தொற்றின் கொடூரத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசு உத்தரவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு இருங்கள். தனித்து இருங்கள் விழித்து இருங்கள்” என போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரீசுக்கு கடந்த மார்ச் 27 ம் தேதி கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதன் முதல் அவர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

பிரிட்டனில் இதுவரை 41,903  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,313 பேர் இறந்துள்ளனர்.