கொரோனா பாதிப்பு – பிரிட்டன் அரசிடம் உதவி கேட்கும் விலைமாதர்கள்

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு நாடுகளும் லாக் டவுன் அறிவித்து, பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றன.

பல்வேறு துறைகள் ஊரடங்கு காரணமாக பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. மீடியா, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ளன. பலருக்கும் வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

இதில், ஆதிகாலத்தில் இருந்தே மனித குலத்துடன் இணைந்திருக்கும் விபசார தொழிலும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலுமே கொரோனா ஊரடங்கால் விலைமாதர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது நிலை குறித்து மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

300 ஆண்டுகளில் இல்லாத மோசமான மந்தநிலையை பிரிட்டன் சந்திக்கும் – ரிஷி சுனக் எச்சரிக்கை

இந்த நிலையில், அண்மையில் வேலை இழப்பால் வருமானம் இன்றி அல்லாடும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவசர நிதி உதவி வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.

இந்தப் பட்டியலில் விபசார தொழிலில் ஈடுபடும் விலைமாதர்கள் கூட்டமைப்பு இடம் பெறவில்லை. இதனால் அந்நாட்டின் விலைமாதர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுபற்றி இங்கிலாந்தில் வாழும் விலைமாதர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து விட்டோம். மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி விட்டனர். மனைவியை விட்டு கணவன்மார்களால் அகல முடியவில்லை. எங்களுடன் போனில் பேசுவதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள். திருமணம் ஆகாத இளைஞர்களோ பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கின்றனர். செயலிகள் வழியாக எங்களுக்கு அழைப்பு வருவதும் அடியோடு நின்று போய்விட்டது.

இதனால் வாடிக்கையாளர்கள் யாரும் கிடைக்காமல், கையில் பணம் எதுவுமின்றி எங்களது நிலை படுமோசமாக உள்ளது. பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.

நாடு முழுவதும் எங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான பெண்களின் கதியும் இதுதான். நாங்களும் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். மின்சாரம், குடிநீர், போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.

எனவே அவசர பண உதவி பெறுவோர் பட்டியலில் எங்களையும் சேர்த்து வறுமையின் பிடியில் இருந்து மீட்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா