கிறிஸ்துமஸ்க்கு சொந்த நாட்டுக்கு திரும்பும் பயணிகளுக்கு சர்பிரைஸ் – பிரிட்டீஷ் ஏர்வேஸ் (வீடியோ)

british airways surprised customers arriving home for Christmas
british airways surprised customers arriving home for Christmas

கிறிஸ்துமஸ் பண்டிகை இதோ வந்துவிட்டது. வெளிநாடுகளில் தங்கி வேலைப் பார்க்கும் மக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்ற நீண்ட விடுமுறையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கும், நாட்டுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சொந்த ஊருக்கு திரும்பும் மனநிலை இருக்கே… அப்பப்பா… அதைச் சொல்லி மாளாது. அப்படியொரு மகிழ்ச்சி இருக்கும். நாம் இத்தனை ஆண்டுகாலமாக பார்த்து வளர்ந்த இடம் தான் என்றாலும், வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் மக்கள், விடுமுறை என்றால், தாங்கள் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிட விரும்புவது தங்களின் சொந்த ஊர் தான்.

நமது பிரிட்டனில் பணிபுரியும் தமிழ் நண்பர்களும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம், கிறிஸ்துமஸ்க்காக சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், விமான நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக வந்துக் கொண்டிருக்கும் சூழலில், திடீரென விமான நிலைய ஊழியர்கள் ஒவ்வொருவராக வாழ்த்துப் பாடலை பாடுகின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள், இந்த சர்பிரைஸ் மொமன்ட்களை தங்கள் மொபைலில் கிளிக்கிக் கொண்டே, தங்கள் சிறகுகளை விரிக்க ஆயத்தமானார்கள்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!