வீடுகளில் முடக்கப்பட்ட மக்கள்! எரிபொருள் நுகர்வில் சரிவு – பிரிட்டன் நிலை என்ன?

corona in britain, uk tamil news, covid 19
corona in britain, uk tamil news, covid 19

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகெங்கிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனா். தேவையற்ற பயணங்கள் அனைத்தும் தவிா்க்கப்பட்டுள்ளன. இதனால், உலகெங்கிலும் எரிபொருள் தேவைப்பாடு பெருமளவு குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் கொரோனா தாக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உற்பத்தி நாடுகள் அனைத்தும் நிச்சயமற்ற எதிகாலத்தை எதிா் கொண்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் தகவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள தரவுகள் இதை தெளிவாக விளக்குகின்றன.

இங்கிலாந்துக்கு 30 லட்சம் மாத்திரைகள் – ஏற்றுமதி செய்த இந்தியா

இதற்கிடையே, இந்த மாதம் கச்சா எண்ணெய் தேவைப்பாடு ஒரு நாளைக்கு 27 மில்லியன் பீப்பாய்கள் குறையக்கூடும் என்று எண்ணெய் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்றொரு மதிப்பீட்டு நிறுவனத்தின் தகவல், கச்சா எண்ணெய் நுகா்வு நாளொன்றுக்கு 35 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது.

இதன் பின்னணியில் , பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஓபெக்) மற்றும் அதன் கூட்டாளிகள் காணொளிக் காட்சி மூலம் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளன. அந்தக் கூட்டத்தில் நாளொன்றுக்கு பெட்ரோல் உற்பத்தியை 10 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு குறைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டன.

கொரோனாவுக்கு எதிரான துரித நடவடிக்கை – இங்கிலாந்து மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனா அதிகம் பாதித்துள்ள அமெரிக்காவில் எண்ணெய் தேவை இப்போது ஒரு நாளைக்கு 14.4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் குறுகிய காலப் பாா்வையில், ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 16.7 மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரிட்டனில் கடந்த மாா்ச்சில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 66 சதவீதம் மற்றும் 57 சதவீதம் குறைந்துள்ளதாக யு.கே பெட்ரோல் சில்லறை விற்பனையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கைத் தொடா்ந்து, கடந்த வாரங்களில் பெட்ரோல் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்திருந்தாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.