லண்டனில் இருந்து ஓஸ்லோ சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

Man arrested over flight bomb threat

ண்டனில் இருந்து ஓஸ்லோ சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள கார்டர்மொயின் விமான நிலையத்துக்கு ரியானைர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது வெடித்துச் சிதறப் போவதாகவும் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து. நார்வே தலைநகரில் விமானம் மிகவும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டென்மார்க் நாட்டின் போர் விமானங்கள் ரியானைர் விமானத்துக்கு பாதுகாப்பாக தரையிறங்கும் வரை வந்தன.

விமான நிலையத்தில் போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். விமானம் தரை இறங்கியதும் பயணிகள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானத்தில் சோதனையிட்டனர். விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை, இது வெறும் மிரட்டல் என்று தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த 51 வயது நபரை போலீசார் கைது  செய்துள்ளனர்.

இது குறித்து ரியானைர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “லண்டன் ஸ்டான்ஸ்டெடில் இருந்து ஓஸ்லோ செல்லும் விமானத்தின் விமானத்தை இயக்கும் குழுவினருக்கு அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானத்தின் பைலட் அவசர கால வழிமுறைகளை பின்பற்றி ஓஸ்லோ விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஒஸ்லோவில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் பத்திரமாக மாற்று விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு ரியானைர் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டப்ளின் சென்ற ரியானைர் விமானத்தின் ஓய்வறையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக துண்டறிக்கை கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் வலுக்கட்டாயமாக ஸ்டான்ஸ்டெடுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் 47 மற்றும் 26 வயதுடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk