பிரித்தி பட்டேல் – இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி உள்துறை செயலாளர்

priti patel
priti patel

இங்கிலாந்தின் கன்சர்வேட்டி கட்சித் தலைமையின் ‘பேக் போரிஸ்’ என்ற பிரசாரத்தின் மிகச்சிறந்த உறுப்பினர் பிரித்தி பட்டேல். பிரதமரின் நம்பிக்கையான முதல்நிலை அணியில் முக்கிய பதவி விகிப்பவர்.

இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையின் ‘பேக் போரிஸ்’ என்ற பிரசாரத்தின் மிகச்சிறந்த உறுப்பினராக இருந்தவர் பிரித்தி பட்டேல். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நம்பிக்கையான முதல்நிலை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர், இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

தெரசா மேவின் பிரெக்ஸிட் யோசனையை மிகவும் விமர்சித்தவர்களில் மத்தியில் பிரித்தி பட்டேல் ஒரு தீவிரமான பிரெக்ஸிட் ஆதரவாளர். பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த சஜித் ஜாவித்துக்கு பதிலாக இங்கிலாந்தின் கருவூலத்துறைக்கு சென்றுள்ள முதல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கருவூலத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பிரித்தி பட்டேல்.

இங்கிலாந்தின் உள்துறை அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் தனது புதிய வேலையைப் பற்றி பிரித்தி பட்டேல் கூறுகையில், “எங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எங்கள் தெருக்களில் நாம் காணும் குற்றங்களை எதிர்த்து போராடவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இப்போது வரவுள்ள சவால்களை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.” என்று கூறினார்.

இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக் மற்றும் பிரித்தி பட்டேல் இருவரும் “பேக் போரிஸ்” பிரசாரத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். தெரசா மே அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராக இருந்த சர்மா, தனது சொந்த அமைச்சின் பொறுப்பை வழங்குவதன் மூலம் அவர் பதவி உயர்வு பெற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை செயலாளர் பிரித்தி பட்டேல் நீண்டகாலமாக ஐரோப்பிய யூனியனின் அதிகாரத்துக்கு எதிரானவராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக ஜூன், 2016 வாக்கெடுப்புக்கு முன்னதாக “வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்திருந்தார்.

பிரித்தி பட்டேல் முதன்முதலில் 2010 இல் எசெக்ஸில் விதாமின் கன்சர்வேட்டிவ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தில் இந்திய புலம்பெயர் சாம்பியனாக முக்கியத்துவம் பெற்றார். அதன்பிறகு, அவர் ஜூனியர் அமைச்சர் பதவிகளுக்கும், 2014 இல் கருவூல அமைச்சராகவும், பின்னர் 2015 பொதுத் தேர்தலுக்குப் பிறகு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தெரசா மே, 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தில் (டி.எஃப்.ஐ.டி) மாநிலச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின்னர், அவர் 2017 ல் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரித்தி பட்டேல் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து முக்கிய இந்திய புலம்பெயர் நிகழ்வுகளிலும் ஒரு முக்கிய விருந்தினராக கலந்துகொள்ளும் குஜராத்தி வம்சாவழியைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராகக் காணப்படுகிறார்.

மேலும், “எங்களுடைய இரு பெரிய நாடுகளுக்கு இடையே ஒரு சிறப்பான உறவு இருக்க வேண்டும். மேலும் நாம் கூட்டாண்மையை வளர்க்க வேண்டும். இந்த அறிக்கை பல தவறவிட்ட சந்தர்ப்பங்களை உள்ளடக்கியது. அதோடு நாங்கள் இங்கிலாந்தில் ஒரு புதிய பிரதமரைப் பெற உள்ளோம்.

“உறவுப் பாலங்கள்: இங்கிலாந்து – இந்தியா உறவை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற அறிக்கையைப் பற்றி பிரித்தி பட்டேல் கூறுகையில், “அரசாங்கம் இந்தியா – இங்கிலாந்து இடையே உறவை உருவாக்க எங்களுடைய அறிக்கை அழைப்பு விடுத்தது.” என்று கூறினார். இந்தியாவில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியுடன் நாங்கள் சேர்ந்து செயல்படுவதில் ஒரு நல்ல மாற்றத்தை அளிக்கும்” என்று பட்டேல் கூறியிருந்தார்.

இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் இஸ்ரேலில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளை வெளியிடத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தி பட்டேலுக்கு 2017 நவம்பரில் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அது ஒரு தனிப்பட்ட வருகை என்று அப்போது இங்கிலாந்து வெளியுறவு செயலாளராக இருந்த ஜான்சன் அவருக்கு ஆதரவளித்துப் பேசினார். இருப்பினும், அவர் புதிய நியமனத்துடன், மீண்டும் இங்கிலாந்து அமைச்சரவையின் மூத்த பிரிட்டிஷ் இந்திய உறுப்பினராக திரும்பியுள்ளார்.