பிரான்சிஸ் புயல் ஏற்படுத்திய மோசமான பாதிப்பு… ஏராளமான சொத்துக்கள் சேதம்… மக்கள் வெளியேற்றம்!

(Image: BBC)

லண்டன், 26 ஆகஸ்ட் 2020: இங்கிலாந்தில் பிரான்சிஸ் புயல் காரணமாக பல லட்சம் பவுண்ட் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் ஒரு வாரமாக மிரட்டிக் கொண்டிருந்த சூறாவளி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. க்வினெட்டில் உள்ள பெதஸ்தா பகுதியில் 104 மி.மீ (நான்கு இன்ச்) அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அதிக மழை பொழிந்த பகுதிகளில் டாப் ஐந்தில் நான்கு வேல்சிலேயே உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

ஊரடங்குக்குப் பிறகு க்வினெட்டில் திறக்கப்பட்ட ஒரு விஸ்கி ஆலை வெள்ளத்தில் மூழ்கியதால் மிகப்பெரிய தேசம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மிக மோசமாக மணிக்கு 75 மைல் (120 கி.மீ) வேகத்தில் பலத்த காற்று வீசியும் கன மழை பெய்தும் உள்ளது. வேல்ஸ் கிளாஸ்லின் நதியில் இதுவரை இல்லாத  வகையில் மிக உயர் மட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது என்று வேல்சின் இயற்கை வளங்களைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு வேல்ஸ் தீ மற்றும் மீட்புப் படையினருக்கு 52க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. ஒரே இரவில் 80க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப் பட்டுள்ளது. வீடுகளுக்கு விரைவாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலை எதுவும் இல்லை. அதே நேரத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்ததாலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் பல லட்சம் பவுண்ட் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

தெற்கு வேல்ஸ் தீ மற்றும் மீட்புப் படை குழு மேலாளர் மெட் ஜோன்ஸ் இது குறித்து கூறுகையில், “காற்று தொடர்ந்து வேகமாக அடிக்கிறது. இந்த ஆண்டின் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இவ்வளவு காற்று மற்றும் மழை என்பது வழக்கத்துக்கு மாறானதாகும். சாலைகள் முழுக்க மரங்கள் விழுந்துகிடக்கின்றன” என்றார்.

விழுந்த மரங்களை அகற்றவும், தண்ணீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உள்ளுர் நிர்வாகங்கள் செய்து வருகின்றன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவற்றை அப்புறப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உழைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk