நாளை காலை முதல் மோசமாகும் வேல்ஸின் வானிலை… பிரான்சிஸ் புயல் எச்சரிக்கை!

(Image: Simon Woodley / SWNS)

லண்டன், 24 ஆகஸ்ட் 2020: வேல்ஸில் பிரான்சிஸ் புயல் காரணமாக நாளை காலை முதல் புதன் கிழமை காலை வரை பாதிப்பு இருக்கும். மணிக்கு 76 மையல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.

மேற்கு இங்கிலாந்தின் கடற்கரை பகுதிகளில் பிரான்சிஸ் புயல் நாளை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் 90 மி.மீ அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எலன் புயல் பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அலுவலக தலைமை வானிலை ஆய்வு நிபுணர் ஆண்டி பேஜ் கூறுகையில், “இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் மிகக் கடுமையான காற்றும், கன மழை இருக்கக் கூடும். இந்தப் பகுதிகளுக்கு அதிகப்படியான எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 25 காலை 9 மணிப் பிறகு இதன் தீவிரம் அதிகரிக்கும். புதன் கிழமை காலையில் இதன் சீற்றம் குறைய ஆரம்பிக்கும்” என்றார்.

நாளை காலை 8 மணி முதல் புதன் கிழமை காலை 8 மணி வரை இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புயல் பிரான்சிஸ் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம். இதன் காரணமாக பயணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. மின்சார விநியோகத்தில் பாதிப்பு, கட்டிடங்கள் பலத்த சேதம் அடைய வாய்ப்புள்ளது. காற்றில் மிக கடினமான பொருட்கள் கூட பறக்க வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செர்டிசன், கான்வி, டென்பிங்ஷையர், க்வினெட், ஆங்கிள்ஸி, போவிஸ் ரெக்ஸ்ஹாம் பகுதிகளுக்கும் மிதமான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது பலரும் மேற்கு கடற்கரைப் பகுதிக்கு விடுமுறைக்கு வந்துள்ளதால், கடற்கரைப் பகுதியில் தங்கியுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk