இங்கிலாந்தில் மூன்று மாதத்தில் 6.49 லட்சம் பேர் வேலை பறிபோய் உள்ளது! – அதிர்ச்சித் தகவல்

இங்கிலாந்தில் அதிகரிக்கும் வேலையிழப்பு!
Courtesy: buyshares.co.uk

ங்கிலாந்தில் கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் ஏற்பட்ட வேலை இழப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில், 6.49 லட்சம் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பல உணவு சங்கிலி ரெஸ்டாரண்ட்கள், ஹோம் நீட் ஷாப்கள் தங்கள் கிளைகளை மூடின, பல பேர் வேலை இழப்புக்கு ஆளாகினர். இதை எதிர்கொள்ள அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

இந்த நிலையில் பெருந்தொற்று குட்பட்ட காலத்தைத் தொடர்ந்து வந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் 6.49 லட்சம் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைவுதான் என்று அரசு கூறினாலும், இரண்டு லட்சத்து 49 பேர் என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், “அரசு வழங்கிய நிவாரண திட்டம் அக்டோபர் மாதம் முடிவடைகிறது. அதன் பிறகே வேலையின்மை பற்றிய முழு பாதிப்பு வெளிப்படும்” என்கின்றனர். இது மக்கள் மத்தியில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தி ஆஃபிஸ் ஃபார் நேஷனல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (ஓஎன்எஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று காலத்தில் இங்கிலாந்தின் சராசரி வார வேலை மணி நேரம் என்பது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வழக்கமாக அது 877.1 மில்லியன் மணி நேரமாக இருந்தது. தற்போது 175.3 மில்லியன் மணி நேரமாக குறைந்துள்ளது. 1971ம் ஆண்டுக்குப் பிறகு வேலை மணி நேரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 1997ம் ஆண்டில் மே முதல் ஜூன் வரையிலான காலத்தில் தான் வேலை நேரம் குறைவாக இருந்ததாக புள்ளிவிவரம் தெரிவித்தது. அதை எல்லாம் முந்தி தற்போது மிகக் குறைவான வேலை நேரம் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அரசு புள்ளிவிவரம் இங்கிலாந்தின் அசல் வேலை இழப்பு, வேலைவாய்ப்பின்மையை பிரதிபலிப்பதாக இல்லை. அரசு புள்ளிவிவரத்தை விட மிக மோசமான அளவில் வேலை இழப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் 86 சதவிகித நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என அவை தெரிவிக்கின்றன.