ஏர் ஆம்புலன்ஸ் மீது லேசர் லைட் அடித்தால் பரபரப்பு!

வில்ட்ஷயர் ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மீது லேசர் லைட் ஒளிரூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற செயல்கள் ஹெலிகாப்டர் விபத்துக்கு வழிவகுத்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 11) வில்ட்ஷயர் ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் தன்னுடைய இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. செமிங்டனில் உள்ள அதன் தரை தளத்துக்கு வந்துகொண்டிருந்த போது தரையிலிருந்து யாரோ லேசர் ஒளியை ஹெலிகாப்டர் மீது ஒளிரச் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

விமானம், ஹெலிகாப்டர் மீது ஒளிரக்கூடிய விளக்குகளைக் காட்டுவது சட்டப்படி குற்றம். இந்த சம்பவம் மிக மோசமான, பொறுப்பற்ற செயல். இதன் மூலம் ஹெலிகாப்டரை இயக்குபவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்” என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று ஹெலிகாப்டர் தரை இறங்கும்போது அதன் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது. இதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டுவர முடியவில்லை. ஹெலிகாப்டர் தரை இறக்க முடியாமல் மேலே எழுப்பப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஹெலிகாப்டர் மீது லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற செயலை கைவிடும்படி ஏர் ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.