இளம் பெண்ணை தவறான இடத்தில் இறக்கிவிட்டு சென்ற கார்… பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்!

Man, jailed, rape, பாலியல், வன்கொடுமை, லண்டன்

லண்டனில் இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் தவறான இடத்தில் டாக்சி டிரைவர் இறக்கிவிட்டு சென்ற நிலையில், அந்த பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு 11.30 மணி அளவில் 29 வயதான பெண் ஒருவர் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். தான் செல்ல வேண்டிய இடத்துக்கு பதில் வேறு வழியில் வண்டி செல்வதால் அதிர்ச்சியுற்ற அவர் டிரைவரிடம் பிரச்னை செய்துள்ளார். இதனால் அந்த டிரைவர் அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

தான் எங்கே இறக்கிவிடப்பட்டோம் என்று தெரியாமல் அந்த பெண் விழித்துக் கொண்டிருந்தார். அது லூயிஷாமில் தனிமையான பகுதியாகும். பெண் ஒருவர் தனியாக நடந்து செல்வதை கவனித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை அணுகி பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அது மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. சத்தம் போட்டு உதவி கேட்க முயன்ற அந்த பெண்ணின் வாயில் அந்த இளைஞர் எதையோ வைத்து அடைத்தார். இதனால் அந்த பெண் மயக்க நிலைக்கு சென்றார்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர். (Image: met.police.uk)

தன்னுடைய தேவை முடிந்ததும் அந்த பெண்ணை செல்ல அந்த இளைஞர் அனுமதித்தார். அந்த பெண் கேட்ஃபோர்ட் பிரிட்ஜ் ரயில் நிலையம் வந்து போலீசை தொடர்புகொண்டு நடந்ததை விவரித்தார். அதன் பிறகுதான் அவர் கொடுத்த அடையாளத்தை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் புல்போனா (21) என்பது தெரிந்தது.

போலீசார் வந்து அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது அந்த பகுதியில் புல்போனா வசித்து வந்ததை கண்டறிந்தனர். அதற்குள்ளாக தான் அணிந்திருந்த ஆடைகளை அப்புறப்படுத்தியது, தன்னுடைய தோற்றத்தை மாற்றியது என்று தடையங்களை அழிக்க புல்போனா பல்வேறு காரியங்களை செய்திருந்தான்.

இருப்பினும், சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் குற்றவாளியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தடய அறிவியல் ஆய்வுகள், விரிவான விசாரணை அடிப்படையில் 2019 அக்டோபர் 25ம் தேதி புல்போனா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

வூல்விச் கிரவுன் நீதிமன்றம் இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட டானட் புல்போனா குற்றவாளி என்று உறுதி செய்துள்ளது. வருகிற செப்டம்பர் 8ம் தேதி அவனுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. இது போன்ற குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான உயர்ந்தபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk