இரண்டாம் கட்ட கொரோனா பரவலை எதிர்கொள்ள 300 கோடி பவுண்ட்! – பிரதமர் அறிவிப்பு

3bn for NHS to prepare for possible second wave

இங்கிலாந்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலை எதிர்கொள்ள 300 கோடி பவுண்ட் ஒதுக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா தொற்று கண்டறியப்படுவது நிகழ்கிறது. கொரோனா மரணங்களும் தினசரி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் இரண்டாம் கட்டணமாக கொரோனா பரவலுக்கு வாய்ப்புள்ளது. அப்படி கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும் வரும் குளிர்காலத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆபத்தை எதிர்கொள்ள மருத்துவத் துறை தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ்க்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதைத்  தொடர்ந்து நேஷனல் ஹெல்த் சர்வீசுக்கு 2ம் கட்ட கொரோனா பரவலை எதிர்கொள்ள 300 கோடி பவுண்ட் ஒதுக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் படி அக்டோபர் மாத இறுதியில் இங்கிலாந்தில் தினசரி 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு பரிசோதனை வசதி அதிகரிக்கப்படும்.

அரசின் நடவடிக்கை காரணமாக நவம்பர் அல்லது கிறிஸ்துமசுக்கு முன்னதாக நாம் பழைய நிலைக்குத் திரும்புவோம்” என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் சாந்த் நாங்பால், இந்த மூன்று பில்லியன் பவுண்ட் எப்படி செலவு செய்யப்பட உள்ளது என்பது பற்றிய விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “அரசு குளிர்காலத்தை எதிர்கொள்வது தொடர்பாக பேசி வருகிறது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். அரசு நிச்சயமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்தான். ஆனால், மிக மோசமான பதிப்பை எதிர்கொள்ள, கோவிட் உடன் மற்ற ஃபுளு பாதிப்பை எதிர்கொள்ள இந்த பணம் எப்படி பயன்படப் போகிறது என்று விளக்க வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk