வடக்கு இங்கிலாந்தில் எல்லா வீடுகளுக்கும் அதிவேக பிராண்ட்பேண்ட்! – 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்

(Image: coxblue.com)

அடுத்த மூன்று ஆண்டுகளில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அடுத்த தலைமுறை முழு ஃபைபர் பிராண்ட் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையான இணைய தொடர்பு சேவையை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றன. இங்கு உள்ள எல்லா வீடுகளுக்கும் அடுத்த தலைமுறைக்கான ஃபைபர் பிராண்ட் சேவையை அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கும் திட்டத்தை பிடி துணை நிறுவனமான ஓப்பன்ரிச் அறிவித்துள்ளது.

ஸ்காடிஷ் உயர் நிலத்தில் இருந்து வேல்ஸ் சமவெளி வரை லட்சக் கணக்கான வீடுகள். தொழில் நிறுவனங்கள் மிக மோசமான இணையதள சேவையை பிரச்னையால் அவதியுற்று வருகின்றன. செலவு மற்றும் குறைவான வருவாய் காரணமாக இந்த பகுதியில் விரைவான நெட்வொர்க் உருவாக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.

இதை மாற்ற, அதிவிரைவு இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆஃப்காம் இந்த பகுதியில் மட்டும் 96 லட்சம் வீடுகள், தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

பி.டி துணை நிறுவனமான ஓபன்ரீச் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த கடினமான இடங்களில் 3.2 மில்லியன் வளாகங்களில் முழு ஃபைபர் பிராட்பேண்ட் உட்டமைப்பை உருவாக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதன் பட்டியலில் ஸ்காட்லாந்தின் வடக்கே துர்சோ, வேல்சின் கார்டிகன், விரிகுடாவில் அபெரிஸ்ட்வித் மற்றும் சர்ரேயில் உள்ள லிங்ஃபீல்ட் உள்ளிட்டவையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து பில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குப் பகுதியில் வீடுகள் தோறும் அதிவேக பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்துவதன் மூலம் ஏராளமானவர்கள் அங்கிருந்தபடியே வீட்டில் இருந்து வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் பயணப் போக்குவரத்து மிச்சமாகும் என்று சென்டர் ஃபார் எக்கனாமிக்ஸ் அண்டு பிசினஸ் ரிசர்ச் மதிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk