இங்கிலாந்து, வேல்ஸில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி வரும் ஏழு இடங்கள்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏழு இடங்களில் கொரோனாத் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. இவை கொரோனாவைப் பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறி வருவதாக இங்கிலாந்து பொது சுகாதார புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.

நாடு முழுக்க முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கை கொண்டுவந்து கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று என்று சுகாதாரப் பணியாளர்கள் எச்சரக்கை விடுத்துள்ளனர். லெஸ்டர் நகரத்தில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ளதால் அந்த பகுதிக்கு மட்டும் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டி இதுபோன்று மற்ற இடங்களிலும் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

ஜூன் 28ம் தேதி லெஸ்டரில் ஒரு லட்சம் பேருக்கு 140 முதல் 141 என்ற அளவிலிருந்த கொரோனாத் தொற்று, ஊரடங்குக்குப் பிறகு ஒரு லட்சத்து 117 என்ற அளவுக்குக் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏழு நாட்களில் கொரோனாத் தொற்று மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு என்பது கடினமானது என்றாலும் அவசியம் தேவையானதும் கூட.  எனவே, உள்ளூர் அளவில் ஊரடங்கு கொண்டு வருவது அவசியம் என்று கூறப்படுகிறது.

ஜூன் 28ம் தேதி கணக்குப் படி, மெர்த்தி டைட்ஃபில்லில் ஒரு லட்சத்துக்கு 9.95 என்பதிலிருந்து 179.03 தொற்று என உயர்ந்துள்ளது., நோஸ்லியில் 6.02ல் இருந்து 20.06 ஆகவும், போலடனில் 15.77ல் இருந்து 24.38 ஆகவும், டென்காஸ்டரில் 17.39ல் இருந்து 21.25 ஆகவும்,, பிளாக்பூலில் 10.77ல் இருந்து 13.64 ஆகவும், லெஸ்டரில் 140.2ல் இருந்து 141.32 ஆகவும் கொரோனாத் தொற்று ஏற்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் பிராட்ஃபோர்டில் 69.44 என்ற நிலையில் இருந்து 45.8 ஆக கொரோனாத் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் பல ஊர்களில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. லெஸ்டரில் ஊரடங்குக்குப் பிறகு கொரோனா எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுகாதார துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.