அமெரிக்கா, ருமேனியாவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் மர்ம உலோகத் தூண்

monolith, mysteriously, Britain, உலோகத் தூண்
(Image: Twitter / @RobdaBank)

அமெரிக்கா, ருமேனியாவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் மர்ம உலோகத் தூண் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் யூட்டா மாகாணத்தில் பாலைவனப் பகுதியில் பிரகாசமாக பளபளப்பான தூண் ஒன்றைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பாறைகளுக்கு நடுவே 10 – 12 அடி உயரத்தில் முக்கோண வடிவிலான தூண்னை அந்த இடத்தில் யார் வைத்தார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இதே போன்ற முக்கோண தூண் ருமேனியாவிலும் கண்டறியப்பட்டது. இது ஏலியன்களின் வேலை என்று ஆளாளுக்கு கதைகட்ட, மனிதர்களின் விஷம வேலைதான் என்று சிலர் கூறினர்.

அமெரிக்க புகைப்பட கலைஞர் அந்த தூணை நான்கு மனிதர்கள் வந்து தூக்கிச் சென்றார்கள் என்று படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஏன் வைத்தார்கள், ஏன் அகற்றினார்கள். அகற்றி தூணை எடுத்துச் சென்றவர்கள் யார் என்று பல கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.

இந்த நிலையில் இங்கிலாந்தின் ஐசேல் ஆல் ஆஃப் வைட் கடற்கரையில் மந்திர முக்கோண தூண் இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐல் ஆஃப் வைட்டின் மேற்கு பகுதியில் உள்ள காம்டன் கடற்கரையில் 7.5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட முக்கோண உலோகத் தூண் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பலரும் வந்து இதை பார்த்துச் செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பலரும் இப்படி சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இதை நாங்கள் நேரில் பார்த்து புகைப்படம் எடுத்தோம் என்று சிலர் ட்விட்டரில் படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த பகுதியை சேர்ந்த அலெக்ஸியா ஃபிஷ்விக் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் நடைப் பயிற்சி செய்தபோது பளபளப்பாகத் தூண் ஒன்று இருப்பதைக் கண்டேன். உண்மையில் இது ஆச்சரியமானதாக இருந்தது” என்றார்.

இதைப் படிச்சீங்களா: இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் அமேசான்!

கடந்த மாதம் உட்டாவில் கண்டெடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லின் நகல் போல இது உள்ளது என்று இதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் இந்த தூண் எப்படி வந்தது, யார் வந்து இதை நட்டு வைத்தார்கள் என்பது பற்றி நேஷனல் டிரஸ்ட் விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் டிரஸ்டின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த உலோகத் தூண் அமைக்கப்பட்டுள்ள இடம் நேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடற்கரை பகுதியாகும்.

இதை யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பதற்கான விசாரணை நடந்து வருகிறது. இது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter