இந்து மத சின்னங்களுடன் உள்ளாடை… லண்டனில் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்!

Selling Products Hindu, அமேசான்
(Image: ANI)

இந்துக்களின் மனம் புண்படும் வகையில் அமேசான் இணையதளத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக லண்டன் அமேசான் நிறுவனத்தின் முன்பாக ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆன்லைன் விற்பனை தளங்களில் இந்து மத கடவுளர்கள் மற்றும் சின்னங்கள் பதிக்கப்பட்ட காலணிகள், உள்ளாடைகள், மிதியடிகள், டாய்லட் சீட் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனையாகின்றன.

இவை பற்றி இந்த நிறுவனங்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்காவுக்கான அமேசான் இணையதளத்தில் இது போன்ற பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பின்னூட்டம் மூலமாகவும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்படும் அமேசான் நிறுவனத்தைக் கண்டித்து மத்திய லண்டனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் முன்பு இங்கிலாந்து வாழ் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான் நிறுவனம் இன, மத வெறியுடன் நடந்துகொள்வதாகவும், அமேசான் வெறுப்பைப் பரப்புவதை நிறுத்த வேண்டும், “மத உணர்வுகளை இழிவுபடுத்துவதையும் காயப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேனர்களை பிடித்திருந்தனர்.

தொடர்ந்து இந்துக்கள் மனம் புண்படும் வகையில் செயல்படும் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இங்கிலாந்தில் இருந்து செயல்படும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கான அமைப்பான ரீச் இந்தியா சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக ரீச் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் மனம் புண்படும் வகையில் மத சின்னங்கள் பொறிக்கப்பட்ட டாய்லட் சீட்டர், செருப்பு, மிதியடி உள்ளிட்டவைகளை அமேசான் இங்கிலாந்து, அமெரிக்க தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக புகார் தெரிவித்தும் அமேசான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்தது!

இதன் மூலம் அமேசான் நிறுவனம் இந்துக்களின் மனத்தை திட்டமிட்டு புண்படுத்தி வருவது உறுதியாகிறது. அமேசான் விற்பனையில் உள்ள இது போன்ற இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும், உள்ளாடை, காலணி போன்ற பொருட்களை திரும்பப் பெற வேண்டும்.

இனி மேலும் இந்துக்களின் மனம் புண்படும் வகையிலான பொருட்கள் விற்பனை இல்லாமல் இருப்பதை அமேசான் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter