பிரிட்டன் காவல்துறை தலைவரின் சர்ச்சை அறிவிப்பு – அதிகரிக்கும் எதிர்ப்பு

A police chief threatened to start checking shopping trolleys for 'unnecessary' items UK coronavirus lockdown

பிரிட்டனின் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது மோசமான நிலையில் உள்ளது. இன்று (ஏப்.10) நிலவரப்படி, பிரிட்டனின் கொரோனா வைரஸுக்கு மொத்தம் 65,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,978 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை 135.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1790ல் பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஷூ – அட ஆச்சர்யமா இருக்கே!

இந்நிலையில், நார்தாம்ப்டன்ஷைர் காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் தெரிவித்துள்ள கருத்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/KTHopkins/status/1248214905632763905

அதாவது, இனி ‘சூப்பர் மார்க்கெட்டுகளில் தேவைக்கு மீறி ஏதாவது வாங்குகிறார்களா என்பதை கண்டறிய மக்களின் ட்ராலிகளை போலீஸ் சோதனை செய்யும்’ என்று எச்சரித்துள்ளார்.

ஊரடங்கை மீறி மக்கள் அனாவசியமாக வெளியே வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு சமூக தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.