ஜோ பிடனுக்கு போரிஸ் ஜான்சன் வாழ்த்து!

congratulates Joe Biden, போரிஸ் ஜான்சன், வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வாக்கு எண்ணிக்கை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை ஏற்க தற்போதைய அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். நீதிமன்றத்தை நாடி தன்னுடைய வெற்றியை உறுதி செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் முழுமையான வெற்றி இன்னும் கிடைக்கவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர்.

முழுமையான வெற்றி யாருக்கு என்று தெரியும் வரை புதிய அதிபருக்கு வாழ்த்துக் கூறப்போவது இல்லை என்று மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “வரலாற்று சாதனை புரிந்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பிடனுக்கும் துணை குடியரசுத் தலைவராக உள்ள கமலா ஹாரிசுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அமெரிக்கா எங்களின் முக்கியமான நட்பு நாடு. காலநிலை மாற்றம் முதல் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு வரை எங்களது பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், வெற்றி உறுதியாகாத நிலையில் ஜோ பிடனுக்கு அவர் வாழ்த்துக் கூறியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் உடன் போரிஸ் ஜான்சன் நெருக்கமாக உள்ளதாக பலராலும் மிகைப்படுத்தப்பட்டது. உண்மையில் அப்படி இல்லை.

கன்சர்வேட்டிவ் அரசாங்கம் தனது டெமாக்ரடிக் கொள்கையுடன் எப்போதும் பொதுவாக செயல்படுகிறது என்று முன்னாள் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோ பிடன் வெற்றி என்பது மிகவும் நல்ல செய்தி என்றும், பருவநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் கொரோனா ஒழிப்பு என அனைத்துக்கும் இது சாதகமாக அமையும்” என்றும் கூறினார்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா ஊரடங்கை விடுமுறை போல ரிலாக்ஸ் செய்யும் மக்கள்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter