2020க்கான பிரிட்டனின் டாப் 5 PUBS – உங்க ஏரியாவில் இருக்கா?

Image Credit - Mail Online
Image Credit - Mail Online

இந்தியாவில் பெரும்பாலும் PUBகளுக்கு வீட்டுக்கு தெரியாமல் சென்று வந்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் பிரிட்டனில் சிறந்த பப்களை தேடிக் கண்டுபிடித்து விருதுகளை அறிவித்து வருகின்றனர்.

The Good Pub Guide Awards இந்த புத்தாண்டுக்கான சிறந்த Pub-களை அறிவித்து அதன் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

முதல் முப்படை தளபதியை நியமித்த இந்தியா – பிரிட்டனில் இந்த பதவி இருக்கா?

முழுக்க முழுக்க அந்தந்த pubகளின் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

PUB OF THE YEAR: The Inn at Whitewell, Clitheroe, Lancashire

ஆண்டின் மிகச் சிறந்த Pubக்கான விருதை தட்டிச் சென்றிருக்கிறது லான்கஷைரில் உள்ள The Inn at Whitewell. இது 500 ஆண்டுகள் பழமையான பப் என்றால் நம்ப முடிகிறதா? ஆரம்பக்கட்டத்தில் வெவ்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு, பிறகு 18ம் நூற்றாண்டில் சுற்றுலாப்பயணிகளுக்கான இடமாக முற்றிலும் மாற்றப்பட்டது.

Image Credit - Mail Online
Image Credit – Mail Online
Image Credit - Mail Online
Image Credit – Mail Online

DINING PUB OF THE YEAR: Assheton Arms, Clitheroe, Lancashire

Lancashire பகுதியில் உள்ள Assheton Arms பப்க்கு ஆண்டின் சிறந்த டைனிங் பப்க்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான இட வசதி, கவனிப்பு, புதிது புதிதான உணவுகள் என இவர்களின் தயாரிப்புகள் என வாடிக்கையாளர்களை வெகுவாக கவர இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image Credit - Mail Online
Image Credit – Mail Online

NEW PUB OF THE YEAR: The Swan, Whitchurch, Shropshire

250 ஆண்டுகள் பழமையான The Swan கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு சற்று மோசமான நிலைக்கு செல்ல, அதன் புதிய உரிமையாளர்கள் 2018ம் ஆண்டு முழுக்க முழுக்க மறு சீரமைப்பு செய்தனர். அதுவும் இயற்கை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே இதனை செய்தனர்.

Image Credit - Mail Online
Image Credit – Mail Online

BEER PUB OF THE YEAR : Fat Cat, Norwich, Norfolk

இளசுகள் மத்தியில் பியருக்கு பிரசித்தி ஒரே பப் என்றால் அது Fat Cat தான். உலகம் முழுவதிலும் இருந்து தயாரிக்கப்பட்ட 50 தரமான பியர் வகைகள் இன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Image Credit - Mail Online
Image Credit – Mail Online

100 ஆண்டுகளில் பிரிட்டன் கொண்டாடிய புத்தாண்டு – இதுவரை நீங்கள் பார்க்காத படங்கள்

WHISKY PUB OF THE YEAR: Bon Accord, Glasgow

கிளாஸ்கோ நகரில் உள்ள Bon Accord சிறந்த விஸ்கிகளுக்கான சிறந்த பப்-ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

400 வகையான விஸ்கி இங்கு கிடைக்கிறதாம். தவிர, 50 வகை ஜின், 20 வகை ரம், கணக்கே இல்லாத அளவில் வோட்கா வகைகளும் இங்கு ஸ்பெஷல் என்பது கூடுதல் தகவல்.

Image Credit - Mail Online
Image Credit – Mail Online

விடுறா வண்டிய பப்புக்கு!!!