முதல் முப்படை தளபதியை நியமித்த இந்தியா – பிரிட்டனில் இந்த பதவி இருக்கா?

Britain Chief staff of defence (Image Source - FP)
Britain Chief staff of defence (Image Source - FP)

ஜெனரல் பிபின் ராவத் திங்களன்று இந்தியாவின் ​​முதல் முப்படை தளபதியாக (சி.டி.எஸ்) நியமிக்கப்பட்டார். முப்படை சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அரசியல் தலைமைக்கு வழங்கப்படும் இராணுவ ஆலோசனையின் தரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய பதவியாகும்.

100 ஆண்டுகளில் பிரிட்டன் கொண்டாடிய புத்தாண்டு – இதுவரை நீங்கள் பார்க்காத படங்கள்

முப்படை தளபதி என்பது இராணுவத்தின் ஒரு உயர் அலுவலகம். இது மூன்று சேவைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறது, ஒருங்கிணைக்கிறது. மேலும், நீண்டகால பாதுகாப்பு திட்டமிடல் (உதாரணமாக ராணுவத்திற்கு தேவைப்படும் மனிதவளங்கள் , உபகரணங்கள், கூட்டுப் போர் யுக்திகள்) குறித்து இந்திய பிரதமருக்கு  தடையற்ற ஆலோசனைகளை வழங்கும்.

உலகெங்கிலும் பல நாடுகளில் இதுபோன்ற பதவி உள்ளது.

பிரிட்டிஷ் அரசு : முப்படை தளபதி

பிரிட்டிஷின் முப்படை தளபதி  (சிடிஎஸ்) ஆயுதப் படைகளின் முதன்மைத்  தலைவராவார்.  பாதுகாப்பு துறை செயலாளருக்கும் (இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சருக்கு சமமானவர்) மற்றும் அரசாங்கத்திற்கும்  முதன்மை இராணுவ ஆலோசகராவும் இருக்கிறார் .

பிரிட்டிஷின் முப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருக்கும், பிரதமருக்கும் அறிக்கை அளிப்பதாக இங்கிலாந்து அரசின் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy New Year 2020: புத்தாண்டு ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – பிரிட்டன் தமிழ் நண்பர்களுக்காக

இந்த பதவி பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் செயல்படுகிறது. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின்  மூத்த அரசு ஊழியரான நிரந்தர பாதுகாப்பு செயலாளரின்  கீழ் முப்படை தளபதி பணியாற்றுகிறார்.

முப்படை தளபதி தலைமைத் தளபதிகள் குழு (சி.எஸ்.சி) தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.

முப்படை தளபதி  முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக நாட்டின் பாதுகாப்பு (நிரந்தர செயலாளருடன் இணைந்து), ராணுவப் படைகளின் எதிர்கால வளர்ச்சி (அமைச்சர்களின் வழிநடத்துதலுக்கு உட்பட்டு, மற்றும் நிரந்தர செயலாளருடன் சேர்ந்து), பாதுகாப்புக்கான மூலோபாயத்தை அமைத்தல், ராணுவ செயல்முறைகளை தொடருதல், பிற நாட்டு  ஆயுதப்படைகளுடன் உறவை மேம்படுத்துதல் (தளபதியாக) ஆகியவையாகும்.