பிரிட்டனில் பலியானோர் எண்ணிக்கை 18,000 தாண்டியது – கட்டாயமாகும் முகக் கவசம்

corona virus in britain, uk corona virus, பிரிட்டன் கொரோனா வைரஸ்,

பிரிட்டனில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 18,000 தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 4,451 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,33,495 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்

24 மணி நேரத்தில் 759 பேர் பலியாகி இருப்பதன் மூலம், அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 18,100 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் பொது வெளியிலும் ரயில், பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் மக்கள் முகக் கவசத்தை அணியுமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆனால், எவ்வித அறிகுறியும் தென்படாதவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் தாயில் உடலை பார்க்க முடியாத நிலை – இங்கிலாந்து தமிழ்க் குடும்பத்தின் சோகம்