கொரோனாவால் தாயில் உடலை பார்க்க முடியாத நிலை – இங்கிலாந்து தமிழ்க் குடும்பத்தின் சோகம்

corona virus in uk, uk tamil news, britain tamil news, கொரோனா, இங்கிலாந்து தமிழ் செய்திகள்
corona virus in uk, uk tamil news, britain tamil news, கொரோனா, இங்கிலாந்து தமிழ் செய்திகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அவரது தாயின் இறுதிச் சடங்கை ஒத்திப் போடுவதற்காகும் செலவினங்களுக்காக, ஆன்லைனில் ஒரே நாளில் 6,000 பவுண்டுகளுக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.

கிழக்கு இங்கிலாந்தின் கிங்ஸ் லினில் உள்ள  குயின் எலிசபெத் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியுந்து வந்த ஜெனிபர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர வெண்டிலேடர் உதவியில் இருக்கிறார். ஜெனிபரின் தாய்  அனுசுய சந்திர மோகன் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார் என்று உறவினர் ஈவ்லின் நடார் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு – குழந்தை பெற்று உயிரிழந்த பிரிட்டன் செவிலியர்

கோ ஃபண்ட் மீ பக்கத்தில் நிதி திரட்டலைத் தொடங்கிய ஈவ்லின் நடார் கூறுகையில், ”ஜெனிபர் வெண்டிலேட்டர் உதவியில் இருக்கும் போது, இறுதிச் சடங்குகள் ஒரு கடினமான விஷயம் தான். ஒருபுறம் தாயின் இழப்பு, மறுபுறம் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராட்டம். ஜெனிபர் அனைத்தையும் கடந்து வந்து தனது தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும். இதற்கான, இறுதிச் சடங்கினை தாமதிக்க திட்டமிட்டோம். அனுசுய சந்திர மோகனின் எந்தவித குறையுமின்றி வழியனுப்பி வைக்க வேண்டும். இதற்குத் தேவைப்படும் செலவினங்களை ஜெனிபரின் உற்றார், உறவினர் என அனைவரும் கோ ஃபண்ட் மீ பக்கத்தில் கொடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஜெனிபர் இல்லாத இறுதிச் சடங்கை நடத்த இருப்பதாக இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ ஃபண்ட் மீ பக்கத்தில் நிதி திரட்டலும் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த பக்கத்தில்,பயனாளியின் பெயர்  சரவணன் ஆறுமுகம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த  தமிழக மக்களுக்கும் அளப்பரிய சோகத்தை எற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.