கனடா போன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

Britain News in Tamil
Britain News in Tamil

ஐரோப்பிய ஒன்றியம் – கனடா இடையேயான வர்த்தக் ஒப்பந்தம் போன்றே, பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என பிரிட்டன் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரிட்டன் விலகியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லண்டனில் சமோசா வாரம் எப்போது தெரியுமா?

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் – கனடா இடையே ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் போன்றே, பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தகம் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள வெளியுறவுத் துறை செயலர் டோம்னிக் ராப், குறைந்த வரிகளை விதிக்கும் வகையிலான ஒப்பந்ததையே பிரிட்டன் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரிட்டனின் சட்ட அதிகாரங்கள் திரும்பவும் அதன் கையில் கிடைக்கப் பெற உள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின், பெரும்பாலான விதிமுறைகளுடன் ஒத்துப்போக போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கனடா ஒப்பந்தம் போன்ற வர்த்தக ஒப்பந்தத்தை பெறும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தனது வாக்குறுதியின் படி நடந்தால் இருதரப்புக்கும் வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

British Academy Awards 2020: சிறந்த திரைப்படமாக ‘1917’ தேர்வு