வேல்சில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்… 40 குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட மத போதகர்!

pastor, sex offences, BBC
(Picture Courtesy: BBC)

பிபிசி வேல்ஸ் முன்னாள் தொகுப்பாளரும் மத போதகராக பணியாற்றி வந்தவருமான பென் தாமஸ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவ மத முன்னாள் போதகரும் பிபிசி வேல்ஸ் தொகுப்பாளருமான 44 வயதான பென் தாமஸ் 40க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் பாலியல் மற்றும் பார்வை மோகம் மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர் பிபிசி-யில் நிருபர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வேல்ஸ் மொழி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். 2005ம் ஆண்டு பி.பி.சி-யில் இருந்து விலகி சிரிசித் குடும்ப தேவாலயத்தில் மத போதகர் ஆனார். அந்த பொறுப்பில் இருந்தும் கடந்த ஆண்டு அவர் விலகினார். தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிரியாராக பணியாற்றி வந்த பென் தாமஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. இதன் அடிப்படையில் வடக்கு வேல்ஸ் போலீஸ் விசாரணை நடத்தியது. அதில் அவர் குழந்தைகள் மத்தியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மோல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து வடக்கு வேல்ஸ் போலீஸ் டிசி லின் வில்ஷர் கூறுகையில், “மதத் தலைவராக இருந்து கொண்டு பென் தாமஸ் ஏதும் அறியாத, எதிர்த்து எதையும் செய்ய முடியாத குழந்தைகளிடம் தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதலை செய்து வந்துள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்த குடும்பங்கள் மற்றும் வன்முறைக்கு ஆளானவர்கள் மீதான நம்பிக்கை மோசடி ஆகும். அவர் செய்த குற்றம் அந்த குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

இன்று நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட 40 பாலியல் குற்றச்சாட்டுக்களை பென் தாமஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மிக நீண்ட விசாரணை மற்றும் கடுமையான பரிசோதனைகளில் இருந்து தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் காட்டிய உறுதியான நடவடிக்கைக்கு வடக்கு வேல்ஸ் காவல்துறை நன்றியுள்ளவர்களாக இருக்கிறது. எங்களின் விசாரணை மூலமாக இன்று நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது” என்றார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் யாராக இருந்தாலும் பயப்படாமல் 101 என்ற எண்ணுக்கு அல்லது வடக்கு வேல்ஸ் காவல் துறையைத் தொடர்புகொள்ளலாம் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk