கொரோனா பாதிப்பு: 2500 பேரை நீக்கும் டெபன்ஹாம்ஸ்!

(Image: Liam McBurney)

கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய நிதி சுமையில் இருந்து தப்பிக்க கூடுதலாக 2500 பேரை வேலையில் இருந்து நீக்குவது என்று முன்னணி டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் சங்கிலித் தொடரான டெபன்ஹாம்ஸ் அறிவித்துள்ளது.

நாட்டின் வேலை வாய்ப்பின்மை மிகப்பெரிய ஆழத்துக்கு சென்றுள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது. வரும் காலங்களில் பொருளாதார நிலைமை சீரடையும் என்று தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சி தட்டையாகவே இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்த நிலையில், இன்று முன்னணி டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் தொடரான டெபன்ஹாம்ஸ் தன்னுடைய பணியாளர்களை நீக்கும் முடிவை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த மே மாதம் முதல் 4000ம் பேரை பணியில் இருந்து அனுப்பியுள்ள நிலையில் மேலும் 2500 பேரை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கடைகள் மூடப்படும் என்றாலும் புதிதாக திறக்கப்பட்ட கடைகளை மூடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

டெபன்ஹாம்ஸ் முடிவுக்கு ஸ்டோர் ஊழியர்கள் சங்கமான உஸ்டவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெபன்ஹாம்ஸ் சட்ட ரீதியாக பணியாளர்கள் நீக்கம் பற்றிய முடிவை எடுக்கவில்லை. ஊழியர்களுக்கு மாற்றுத் திட்டம் யோசிக்கக் கூட நேரம் வழங்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் வழக்குத் தொடர்வது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம் என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெபன்ஹாம்ஸ் தரப்பில் கூறுகையில், “கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக மிகப்பெரிய சரிவை டெபன்ஹாம்ஸ் சந்தித்துள்ளது. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பழைய நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும்” என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk