டெல்லி ஐஐடிக்கும் பிரிட்டன் அரசுக்கும் என்ன தொடர்பு? – இங்கிலாந்து ஆர்வம் காட்டாதது ஏன்?

Delhi IIT
Delhi IIT

இந்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு இந்திய வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

புத்தாண்டுக்கு ராணி கைகளால் விருது பெறுவோர் பட்டியல் – இங்கி., கேப்டன் இயன் மோர்கனுக்கு உயரிய விருது

சென்னை ஐ.ஐ.டியிலும் அவ்வாறு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டார் ஜெர்மனியை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவர் ஒருவர். அவர் கையில் வைத்திருந்த பதாகையில் “அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

இதற்காக, இவர் இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டர்.

இதில் முக்கிய தகவல் எனவேன்றால் , ​​ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கு ஜெர்மன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் உதவியுடன் நிறுவப்பட்டது. மெட்ராஸைத் தவிர, பம்பாய், கான்பூர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டி.களும் வெளிநாட்டு ஒத்துழைப்பின் மூலம் தான் நிறுவப்பட்டன.

மேலும் படிக்க – UK Bank and Public Holidays 2020: பிரிட்டனில் வங்கி, பொது விடுமுறை தினம் – ழுழு லிஸ்ட் இங்கே

குறிப்பாக டெல்லி ஐஐடி இங்கிலாந்து அரசின் உதவியால் தொடங்கப்பட்டது.

இது 1961ல் நிறுவப்பட்ட ஐந்தாவது ஐ.ஐ.டி.

நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி: “டெல்லியில் ஐஐடி உயர்க் கல்வி அமைப்பது தொடர்பாக இந்திய அரசு ஒத்துழைப்புக்காக பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அத்தகைய ஒத்துழைப்புக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டாலும் , ஆரம்பத்தில் ஒரு சுமாரான வழியில் தான் தனது ஒத்துழைப்பை முனைந்தது. எனவே அவர்களின் உதவியுடன் டெல்லியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

டெல்லி இன்ஜினியரிங் கல்லூரி அறக்கட்டளை இங்கிலாந்து அரசு மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கைத்தொழில் கூட்டமைப்பின் உதவியுடன் நிறுவப்பட்டது. பின்னர், எச்.ஆர்.எச். எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப்ஸ் தனது இந்திய பயணத்தின் போது, ஜனவரி 28,1959 அன்று  கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

இங்கிலாந்து தமிழர்கள் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும், இங்கிலாந்தின் முக்கிய செய்திகளையும் உங்கள் தமிழ் மைக்செட் தளத்தில் நீங்கள் காணலாம்.