புத்தாண்டுக்கு ராணி கைகளால் விருது பெறுவோர் பட்டியல் – இங்கி., கேப்டன் இயன் மோர்கனுக்கு உயரிய விருது

New Year's Honours full list 2020
New Year's Honours full list 2020

பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும், நாட்டுக்காக ஏதாவது ஒரு வகையில் சிறப்பாக சேவையாற்றி பெயரும், புகழும் தேடிக் கொடுக்கும் நபர்களுக்கு, புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து ராணி விருதுகள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நான்கு வீரர்களை கெளரவம் அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் பிரபல பாடகர் ஒலிவியா நியூட்டன்-ஜான் இடம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க – UK Bank and Public Holidays 2020: பிரிட்டனில் வங்கி, பொது விடுமுறை தினம் – ழுழு லிஸ்ட் இங்கே

ஜூலை மாதம் லார்ட்ஸில் நியூசிலாந்திற்கு எதிரான வெற்றியின் ஆட்ட நாயகன் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் OBE விருது பெறுகிறார். அதே நேரத்தில் அணி கேப்டன் இயன் மோர்கன் அதிக CBE விருதைப் பெறுகிறார்.

OBE – Officer of the Most Excellent Order of the British Empire

CBE – Commander of the Most Excellent Order of the British Empire

விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், பேட்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் MBE விருதும், பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் OBE விருதும் பெறுகின்றனர்.

MBE – Member of the Most Excellent Order of the British Empire

சர் எல்டன் ஜானும் இந்த பட்டியலில் உள்ளார்.

மூன்று தொலைக்காட்சி சமையல் நட்சத்திரங்களான – நைகல் ஸ்லேட்டர் ஒரு OBE விருதுக்கும், நடியா உசேன் மற்றும் ஐன்ஸ்லி ஹாரியட் MBE விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க – ‘பிரெக்ஸிட்டுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தும்’ – சிஇபிஆர்

டிவியில் மற்றொரு பழக்கமான முகம், கேபி லோகனுக்கு விளையாட்டு ஒளிபரப்பு மற்றும் பெண்கள் விளையாட்டை மேம்படுத்திய சேவைகளுக்காக MBE விருது வழங்கப்படுகிறது.

உலக டேக்வாண்டோ சாம்பியனான ஜேட் ஜோன்ஸ், மற்றும் நெட்பால் வீரர்களான செரீனா குத்ரி மற்றும் ஜோன் ஹார்டன் ஆகியோர் MBE விருதுக்கும், இங்கிலாந்தின் கால்பந்து வீரர்களான ஜில் ஸ்காட் மற்றும் வேல்ஸ் மாகாணத்தின் லோரன் டைக்ஸ் ஆகியோருக்கும் MBE விருது வழங்கப்படுகிறது.

இன்னும் ஏராளமானோர் ராணி கைகளால் விருதை பெற உள்ளனர். அதன் முழு லிஸ்ட் காண இங்கே க்ளிக் செய்யவும்