லண்டன் அமோகமாக விற்பனையாகும் போலி கொரோனா இம்யூனிட்டி பூஸ்டர் மருந்து!

கொரோனா,

இங்கிலாந்தில் கொரோனா கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் என்று இந்தியாவின் பதஞ்சலி தயாரிப்பு மருந்துகள் மிகப்பெரிய அளவில் விற்பனையாவதாக பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, அதை எதிர்க்க மருந்து தயாரித்துள்ளதாக இந்தியாவின் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது. கொரோனில் என்று அதற்கு பெயரும் வைக்கப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்று இந்தியாவின் உத்ரகாண்ட் மாநில ஆயுர்வேதத் துறையில் அனுமதி பெறப்பட்டது.

ஆனால், விற்பனை செய்யும்போது கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் என்று விளம்பரம் செய்யப்படவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியில் இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படாது என்று பாபா ராம்தேவ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

தற்போது இந்த மருந்துகள் லண்டன் மற்றும் இங்கிலாந்து முழுக்க இந்தியர்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சுவாச பாதை நோய்த் தொற்றை எதிர்க்கும் மருந்து என்று விற்கப்படுவதைத் தொடர்ந்து பிபிசி ஊடகம் இந்த மருந்து உண்மையில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தது.

பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் வைத்து இந்த மருத்து பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து வைராலஜி நிபுணர் டாக்டர் மைத்ரேய் சிவ்குமார் கூறுகையில், “நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்கொள்வதற்கும் தொடர்பில்லை.

இதைப் படிச்சீங்களா: பிரிட்டனின் கொரோனா ஆர் நம்பர் மீண்டும் ஒன்றுக்கு மேல் சென்றது!

இந்த மருந்து தாவர பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டதாக இல்லை.

நோய் எதிர்ப்பு மண்டலம் எப்படி வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது என்பதில் ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன.

வைரலாஜி நிபுணர்களாகிய எங்களுக்கே நோய் எதிர்ப்பு மண்டலம் எப்படி கிருமியை எதிர்கொள்ள உதவுகிறது என்பது பற்றி சரியாக தெரியவில்லை.

கொரோனில் மருந்து எப்படி கொரோனா வைரஸ் கிருமியை எதிர்கொள்கிறது என்பதற்கான விளக்கத்தை அதை தயாரித்த நிறுவனம் வழங்கவில்லை” என்றார்.

கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படாது என்று பாபா ராம்தேவ் அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படும் என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானவர்கள் இந்த மருந்தை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் எந்த பலனும் இருக்கப் போது இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter