அரசு குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி – எதிர்காலம் என்ன?

சிம்மாசனத்தின் முதல் வாரிசான இளவரசர் சார்லஸ், அவரது மகன்களான வில்லியம், ஹாரி ஆகியோரை சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டுக்கு வரவழைத்து பதட்டத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையை  நடத்துகிறார் இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபத். இந்த பேச்சுவார்த்தையில் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனும் கனடாவிலிருந்து தொலைபேசி மூலம் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ஜப்பான் பேரரசர்

ஹாரி – மேகன் எதிர்காலம் குறித்த சில முக்கிய கேள்விகள் இங்கே:

அவர்களின் இந்த அறிவிப்பு ஏன் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ?

சசெக்ஸின் டியூக்/டச்சஸ் என்று அழைக்கப்படும் இளவரசர் ஹாரி- மேகன் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்ட மூத்த அரசு குடும்பத்தினர். முடியாட்சியின் சாரம்சத்தை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும்  முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு என்று பலரும் நம்பியிருந்தனர்.

எவ்வாறாயினும், ஹாரி- மேகன் தம்பதி அரசு பதவி குறித்து  ஆரம்பத்தில் இருந்தே மகிழ்ச்சியற்றவர்களாக காட்சியளித்து வந்தனர்.

முடிவாக கடந்த வாரம்  ஹாரி- மேகன் தம்பதி தங்கள் இன்ஸ்டகிராம் அக்கவுண்ட்டில்,”அரச கடமைகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தனர். நிதி ரீதியாக சுயாதீனமாக இயங்கவும், வாழ்வில் அதிக நேரத்தை வட அமெரிக்காவில் செலவிடவும் விரும்புவதாகவும் தெரிவித்தனர். இந்த இன்ஸ்டகிராம்  தகவல், அரச குடும்பத்தின் மிக உயர்ந்த பதவிகளில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

 

மக்கள் வரிப்பணம்  வேண்டாம் ஹாரி- மேகன் சொல்கிறார்கள்,  அவ்வாறு அவர்கள் விலக முடியுமா?

ஹாரி-மேகன் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இனிமேல் தங்கள் அலுவலக செலவுகளுக்காக இறையாண்மை மானியத்தை(Sovereign Grant) பயன்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர். முடியாட்சிக்கு நிதியளிக்கும் வகையில்  பிரிட்டனின் அரசு கருவூலத்தால் இந்த மானியம் வழங்கப்படுகிறது, கடந்த ஆண்டு இது மொத்தம் 80 மில்லியன் பவுண்டுகள் ( அதாவது,104 மில்லியன் டாலர்கள்).

எவ்வாராயினும், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கு அரசு நிதியை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இளவரசி ஒப்புக் கொண்டால்  சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஃபிராக்மோர் எஸ்டேட்டை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று தெரிவித்து இருக்கின்றனர்.

ஃபிராக்மோர் எஸ்டேட்

இருந்தாலும், எந்தவொரு புதிய ஏற்பாட்டிற்கும் ராணியும் அவரது அரசாங்கமும் இன்னும் முறையாக ஒப்புக் கொள்ளவில்லை.

இளவரசர் சார்லஸ் தொடர்ந்து உதவி செய்வாரா?

1337 ல் நிறுவப்பட்ட டச்சி ஆஃப் கார்ன்வால் தோட்டத்திலிருந்து கணிசமான வருவாயை சார்லஸ் இளவரசர் ஒவ்வொரு ஆண்டும், (எலிசபத்தின் மூத்த மகன்)பெறுகிறார். அதன் சொத்துக்களை விற்க அனுமதி இல்லையென்றாலும், அதிலிருந்து பெரும் வருவாயை – அவரது மனைவி கமிலா, வில்லியம்-கேட் (சார்லஸ் இளவரசனின் மூத்த மகன்), மற்றும் ஹாரி -மேகன் (சார்லஸ் இளவரசனின் இரண்டாவது மகன்) ஆகியோருடன் இணைந்து  பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்துகிறார் .

கடந்த ஆண்டின் வருமானம் 20 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இருந்தது. ஹாரி- மேகன் இனி அரச கடமைகளைச் செய்யாவிட்டால், சார்லஸ் விரிவான ஆதரவை வழங்க விரும்புவார் என்பது தெளிவாக இல்லை. பேச்சுவார்த்தையில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கலாம்∫.

மேகன் தனது பிரபல அந்தஸ்திலிருந்து லாபம் பெற முடியுமா?

ஜூலியா ராபர்ட்ஸ், நிக்கோல் கிட்மேன் , கெய்ரா நைட்லி ஆகியோருக்கு  இணையாக வாசனைத் திரவியம் போன்ற பொருட்களுக்கு மேகன்  பிராண்ட் தூதராக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. பேஷன் போன்ற விஷயங்களில்  பகுதிநேர அடிப்படையில் தொடர திட்டமிட்டுள்ளதாக ஹாரி- மேகன் ஏற்கனவே கூறியிருந்தனர் . ஆனால், நிதி சுதந்திரத்திற்கான இந்த வாழ்க்கை முறையை, ராணியும், குடும்பத்தின் மற்றவர்களும் பக்குவத்தோடு ஏற்பார்களா? என்பது தெளிவாக இல்லை…..

அவர்களின் பாதுகாப்புக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

அரசு குடும்பத்தின் மூத்த அதிகாரிகளுக்கு பெருநகர காவல்துறை சிறப்பு  ஆயுதப் பாதுகாப்பு பிறிவு  மற்றும் பிற நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இது மக்கள் வரி பணத்தால் இயங்கி வருகிறது. ஆனால், இதற்கான செயல்பாட்டு விவரங்கள் (செலவு கணக்கு) உட்பட  அனைத்தும் ரகசியமாக வைக்கப்படுகிறது. அரசு குடும்பத்திற்கான பாதுகாப்பு பிரிட்டனின் உள்துறை அலுவலகத்தால் “கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஹாரி-மேகன் தங்கள் இணையதளத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இந்த  தம்பதியினர் தங்களுக்கு அளிக்கப்படும்  உத்தியோகபூர்வ பாதுகாப்பைக் கைவிடுவார்களா ?  தமக்கும் தங்கள் குழந்தை மகன் ஆர்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தி பாதுகாப்பை  உறுதி செயவார்களா ? என்பது தெளிவாக தெரியவில்லை.

 

அவர்கள் இன்னும் அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்களா?

ஹெர் ராயல் ஹைனஸ், ஹிஸ் ராயல் ஹைனஸ் போன்ற அரசு பட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் கேட்கப்பட்டு வருகிறது. இவை மிக உயர்ந்தநிலை பட்டங்கள். ஹாரி- மேகன் இந்த பட்டங்களில் இருக்கும் ஊடுருவும் தன்மை காரணமாக அதைத் தவிர்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் தானாக முன்வந்து பட்டங்களை விட்டுவிடலாம்.

அவர்களின் வரி நிலைமை பற்றி ?

ஹாரி-மேகன் ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான கணிசமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். எனவே ஒரு புதிய நாட்டிற்கான நகரும் முடிவு அவர்கள் செலுத்தும் வரியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேகனின் தாய் வசிக்கும் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல திட்டமிடுகிறார்களா? (அல்லது) சமீபத்தில் வான்கூவர் தீவில் ஒரு நீண்ட விடுமுறையைக் கழித்த கனடா நாட்டில் தங்க இருக்கிறார்களா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை . எனவே, அவர்களின் தனிப்பட்ட நிதி எவ்வாறு வெளிநாட்டு நடவடிக்கையால் பாதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை

மேகன் முதலில் ஒரு அமெரிக்க குடிமகன்,அவர் ஏற்கனவே அமெரிக்காவில் வரி செலுத்துவதாக நம்பப்படுகிறது.  ஹாரி அமெரிக்காவில் போதுமான நேரத்தை செலவிட்டால் யு.எஸ். வரிகளுக்கு பொறுப்பேற்கக்கூடும். இருவரும் கனடா நாட்டில் கணிசமான காலத்தை செலவிட்டால் இருவரும் கனேடிய வரிகளுக்கு ஆளாக நேரிடும்.

இந்த சிக்கல்களைச் செயல்படுத்துவது கூட தற்போது எந்த முடிவுக்கும் உடனடியாக வரமுடியாத காரணமாக இருக்கலாம்.