கொரோனா நிலைமை சரியாக அடுத்த ஆண்டு ஈஸ்டர் வரை ஆகலாம்!

Jonathan Van Tam
துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதன் வான் டாம் (Image: PA)

இங்கிலாந்தில் கொரோனா சூழ்நிலை மேம்பட அடுத்த ஆண்டு ஈஸ்டர் வரை கூட ஆகலாம் என்று என்.ஹெச்.எஸ் டெபுட்டி சீஃப் மெடிக்கல் ஆபீசர் ஜோனத்தன் வான் டாம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று 2ம் அலை குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நிலைமை சரியாகும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதும், அரசு தீவிர நடவடிக்கை கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்து வருவதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அரசின் விஞ்ஞானி ஜோனத்தன் வேன் டாம் கூறுகையில், “பொது மக்கள் தங்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்ப அடுத்த வசந்த காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் புதிய இறக்கம் ஏற்படும். அதன் பிறகே புதிய விடியல் தோன்றும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் முன்பு 0.8 என்ற அளவில் இருந்தது. தற்போது அது ஒன்றாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்.ஹெச்.எஸ் விஞ்ஞானியின் இந்த கருத்து மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “ஆற்றல் மிக்க தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை மக்கள் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஈஸ்டருக்கு முன்னதாக தடுப்பூசியால் மிகப்பெரிய அளவுக்கு பொது சுகாதாரத்தில் மாறுதலை ஏற்படுத்தப்படும் என்று நான் நினைக்கவில்லை.

மிக சமீபத்தில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று கருதவில்லை. அதன் பாதிப்பு இருக்கும்… அதனுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். முடிந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பது அதிகரிக்கும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook: https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter: https://twitter.com/tamilmicsetuk