லண்டனில் அடுத்த வாரம் கடுமையாகும் ஊரடங்கு விதிகள்… மேயர் தகவல்!

(Image: w8media)

லண்டன், அக்டோபர் 9, 2020: லண்டனில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அடுத்த வாரம் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக மேயர் சித்திக் கான் தெரிவித்துள்ளார்.

லண்டனில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ஆர் விகிதம் ஒன்றை விடக் குறைவாகவே உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் லண்டனில் அடுத்த வாரம் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சித்திக் கான் கூறுகையில், “நாம் மிகவும் தீவிரமான கட்டத்தில் இருக்கிறோம். இந்த வைரஸ் லண்டனின் ஒவ்வொரு பகுதியிலும் வேகமாக பரவி வருகிறது.

அரசாங்கத்துடன் விவாதித்த போது மூன்று மட்டத்திலான கட்டுப்பாடுகளைப் பற்றித் தெரிவித்துள்ளனர். லெவல் ஒன் என்பது மிகக் குறைவான கட்டுப்பாடுகள் விதிப்பது.

மூன்றாவது லெவல் என்பது மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும். கிட்டத்தட்ட முழு ஊரடங்கு காலத்தைப் போல இருக்கும்.

பிரதமர் இந்த புதிய மூன்று மட்டத்திலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது பற்றி ஆலோசித்து வருகிறார். அடுத்த வாரம் லண்டனுக்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். நிச்சயம் அறிவிப்பார்கள்” என்றார்.

செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 5ம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இம்பீரியல் காலேஜ் ஆய்வு இங்கிலாந்து முழுக்க ஆர் விகிதம் 1.6 என்ற அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் 1.39 ஆக இருந்துள்ளது.

யார்க்‌ஷயர், வெஸ்ட் மிட்ஸ், வட மேற்கு பகுதியில் ஆர் மதிப்பு 1.27 முதல் 1.37 என்ற அளவில் உள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி, ஆர் விகிதம் குறைவுக்கு காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் லண்டனுக்கான கட்டுபாடுகள் நிச்சயம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று மேயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter