டிசம்பர் 2யுடன் முழு ஊரடங்கு முடிகிறது… ஜிம், அனைத்து கடைகளும் திறக்கலாம்! – பிரதமர் அறிவிப்பு

tier system, spring, கொரோனா, ஊரடங்கு

டிசம்பர் 2ம் தேதி கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு ஜிம் மற்றும் அத்தியாவசியமற்றவை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை போரிஸ் ஜான்சன் இன்று வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

இதன்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:

முழு ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடையும். அதன் பிறகு பழையபடி மூன்று நிலை அல்லது அடுக்கு கட்டுப்பாடு அமலுக்கு வரும்.

எந்த பகுதி எந்த அடுக்கின் கீழ் வரும் என்பது பற்றி வியாழக்கிழமை தீர்மானிக்கப்படும். புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு குளிர் காலம் முழுவதும் நீடிக்கும்.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதா என்பதை சரி பார்த்து விதிமுறைகள் தளர்த்தப்படும்.

3ம் அடுக்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்களை பூங்காக்கள் போன்ற வெளி இடங்களில் மட்டுமே சந்திக்க முடியும்.

3ம் நிலையில் பப்கள், உணவகங்கள் வாடிக்கையாளர்களை அனுமதித்து சேவை வழங்கத் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் டேக் அவே, டெலிவரி உள்ளிட்டவை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இரண்டாம் நிலை கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பப்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். உள் அறையில் சேவை வழங்க தடை விதிக்கப்படும். வெளிப்புறத்தில் கூட பானங்களுடன் உணவு பரிமாறும் இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மூன்றாம் நிலையில் உள்ள கேசினோ, பவுலிங் அலேஸ், சாஃப்ட் பிளே ஏரியா, அருங்காட்சியகம், கேலரி, சினிமாஸ் மூடப்பட்டிருக்கும்.

நாடு முழுவதும் ஜிம், பியூட்டி சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும்.

மிகவும் மிதமான நிலையில் உள்ள பகுதிகளில் கால்பந்தாட்டங்களை நேரில் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆறு பேர் விதிமுறை மீண்டும் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது.

இரவு 10 மணிக்கு ஊரடங்கு என்பது இனி இரவு 11 மணிக்கு என்று மாற்றப்படுகிறது.

திருமணங்கள் 15 விருந்தினர்களுடன் நடைபெற அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் மூன்றாம் நிலை கட்டுப்பாடு பகுதியில் திருமண வரவேற்புக்குத் தடை விதிக்கப்படுகிறது. வழிபாட்டுக் அனுமதிக்கப்படும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter