NHS-ன் கோவிட் ஆப்… ஒரே நாளில் 10 லட்சம் பேர் டவுன்லேட் செய்தனர்!

NHS Covid-19 app, கொரோனா ஆப், என்.எச்.எஸ்
கொரோனா ஆப் (Image: NHS)

லண்டன், செப்டம்பர் 24, 2020: கொரோனா தொற்றாளர்கள் கண்டறியும் செயலியை தேசிய சுகாதார சேவை (NHS) வெளியிட்டுள்ளது.

முதல் நாளிலேயே இங்கிலாந்து மற்றும் வேல்சில் 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய, அலர்ட் செய்ய புதிய ஆப் ஒன்றை நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் வெளியிட்டுள்ளது.

இதில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும் அவருக்கு அருகில் உள்ள கொரோனா நோயாளியைக் கண்டறியவும் உதவியாக இருக்கும்.

மேலும், சமீபத்தில் சென்று வந்த இடங்களில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று அறிந்து எச்சரிக்கவும் பல வகைகளில் உதவி புரியும் வகையில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட யாரும் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். முதல் நாளே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்பை டவுன்லோட் செய்திருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது பற்றிய தகவல் வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என்று  தெரிகிறது.

இந்த ஆப் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் கூறுகையில், “வைரஸ் நோய்த் தொற்று அபாயத்தில் உள்ளவர்களைக் கண்டறிய இந்த ஆப் உதவியாக இருக்கும்.

ஒவ்வொருவரும் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வதுடன், தங்களுக்கு நேசமாக உள்ளவர்கள், சமூகத்தில் உள்ள மற்றவர்களின் உயிரையும் பாதுகாக்கலாம்.

எவ்வளவு அதிகமாக இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு இது ஆற்றலுடன் செயல்படும்.

கொரோனா எச்சரிக்கையைக் கொடுத்தாலும் நோயாளிகளின் ரகசியம் பாதுகாக்கப்படும்” என்றார்.

இந்த ஆப்பை நிறுவனங்கள் கொடுத்துள்ள மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது உள்ளிட்ட சில பிரச்னைகள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இது போன்ற சிறுசிறு குறைகளை சரி செய்து அனைவரும் இதைப் பதிவிறக்கம் செய்ய அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter