8 குழந்தைகளை கொன்ற செவிலியர் 9 குழந்தைகளைக் கொலை செய்ய முயன்றதாக மீண்டும் கைது!

nurse arrested murdering, செவிலியர்

எட்டு குழந்தைகளைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 30 வயதான செவிலியர் ஒருவர், மேலும் 9 குழந்தையை கொலை செய்ய முயன்றதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவுன்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பி (30). இவர் பச்சிளங் குழந்தையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதைப் படிச்சீங்களா: டிசம்பரில் கொரோனா தடுப்பூசி ரெடி!

எட்டு குழந்தைகளை அவர் கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர் மீண்டும் வேறு சில குழந்தைகளை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மொத்தம் எட்டு குழந்தைகளை கொலை செய்ததாகவும் ஆறு குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது வழக்கு உள்ளது.

இந்த நிலையில் மேலும் மூன்று குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாக லூசி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஒன்பது குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாக செவிலியர் லூசி மீது குற்றச்சாட்டுப் பதிவாகி உள்ளது.

மூண்டு ஆண்டுகளாக நடக்கும் விசாரணை…

இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் பால் ஹியூஸ் கூறுகையில், “செஸ்டர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் இறப்புகள் தொடர்பாக விசாரணை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

பிரத்தியேக துப்பறியும் குழு மிக சிக்கலான இந்த வழக்கை அதன் தீவிரத்தை உணர்ந்து மிகக் கடினமாக ஆராய்ந்து வருகிறது.

குழந்தைகள் ஏன் உயிரிழந்தார்கள், திடீரென்று அவர்கள் உடல்நிலை பாதிப்படையக் காரணம் என்ன என்பது பற்றி அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக 2019ம் ஆண்டு செவிலியர் லூசியை போலீசார் மறுபடியும் கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணைக்காகவும், மேலும் மூன்று குழந்தைகள் கொலை முயற்சி தொடர்பாகவும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த செவிலியர் போலீஸ் கஸ்டடியின் கீழ் உள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்” என்றார்.

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு லூசி முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து செஸ்டர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் எப்படி நடந்தது என்பதை அறிய போலீசார் ராயல் காலேஜ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அன்ட் சைல்ட் ஹெல்த் உதவி நாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter