அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை – இளவரசர் ஹாரி

பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக இருந்த முடிவில் மாற்றமில்லை என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும், பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழு நேர பணிக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

காற்று மாசுபாட்டால் 1,60,000 பேர் உயிரிழக்க வாய்ப்பு – பிரிட்டன் எச்சரிக்கை

இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் யாரையும் அவர்கள் கலந்தோசிக்கவில்லை என கூறப்படுகிறது. இருவரின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் நிலையிலிருந்து விலகியதும், லண்டன் அரச குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறையாண்மை மானியத்தை இனி பெறப்போவது இல்லை என ஹாரியும், மேகனும் அறிவித்தனர். இந்த முடிவு, அரச குடும்பத்தின் பொருளாதார சுதந்திரம் கொண்ட உறுப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், தாங்கள் எந்த வடிவத்திலும் சம்பாதிப்பதற்கு தடை உள்ளதாகவும், தங்களுடைய புதிய பணிகள், முழு நேர வேலைக்கு செல்லும் அரச குடும்ப உறிப்பினர்களாக தங்களை மாற்றும் எனவும் அவர்கள் கூறினர்.

இளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இளவரசர் ஹாரியுடன் எலிசபெத் ராணி, இளவரசர் சார்லஸ், வில்லியம்ஸ் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொறுப்புகளை துறக்கும் முடிவை கைவிடக்கோரி ராணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை, இளவரசர் ஹாரி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்சிட் – நிம்மதியடைந்த போரிஸ் ஜான்சன்