ஆளுங்கட்சி எம்.பி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கைக் கைவிட்ட மெட் போலீஸ்!

tier system lockdown, ஊரடங்கு, கட்டுப்பாடு, கொரோனா, பாலியல்

முன்னாள் அமைச்சரும் ஆளுங்கட்சியின் தற்போதைய எம்.பி-யுமாக ஒருக்கும் ஒருவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை கைவிடுவதாக மெட் போலீஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி ஒருவர் மீது கடந்த ஜூலை மாதம் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ஆளுங்கட்சி தலைமை கொறடா ஸ்பென்சரிடம் புகார் அளித்துள்ளார். வெஸ்ட்மின்ஸ்டரிலேயே வைத்து தன்னிடம் தகாத முறையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டார் என்றும் கூறியிருந்தார்.

தலைமை கொறடாவே இது பற்றி போலீசில் புகார் செய்யும் படி கூறினார். அந்த பெண் போலீசில் புகார் செய்யவே, ஆளுங்கட்சி எம்.பி-யை சந்தேகத்தின் அடிப்படையில் மெட் போலீசார் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கைது செய்தனர்.

கிழக்கு லண்டன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரை பிணையில் விடுவித்தனர்.ஆனால் அந்த எம்.பி-யின் பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவரை எம்.பி பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் இருந்தே குரல் எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அது வரை பொறுத்திருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி தலைமை கொறடா மார்க் ஸ்பென்சர் கூறியிருந்தார்.

இதைப் படிச்சீங்களா: கிறிஸ்துமஸ் கொரோனா அபாயம் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! – என்.ஹெச்.எஸ் ப்ரொவைடர்ஸ்

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த எம்.பி நாடாளுமன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் மீதான பாலியல் வழக்கை கைவிடுவதாக மெட் போலீஸ் அறிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “முழு விசாரணைக்குப் பிறகு, கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை நடத்துவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்கள் கிடைக்காத சூழலில் தொடர்ந்து வழக்கை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுங்கட்சி எம்.பி மீதான பாலியல் புகாரை அவசர அவசரமாக போலீசார் கைவிடுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter