தென்னாப்பிரிக்காவில் தாக்குப்பிடிக்க முடியலையா? இங்கிலாந்து தோல்வி

sa beat eng 1st test
sa beat eng 1st test

செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்து, 107 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

178 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வெப்பமான புத்தாண்டு – வானிலை மையம்

இதில், முதல் டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் தே டெஸ்ட்), செஞ்சூரியனில் கடந்த டிச.26ம் தேதி தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டி காக் 95 ரன்கள் எடுத்தார்.

SA vs ENG : Image Source (Cricket Southafrica)
SA vs ENG : Image Source (Cricket Southafrica)

பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கே சுருண்டது. ஜோ டென்லி அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க – UK Weather Warning: இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை – முழு விவரம் இங்கே

இரண்டாவது இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்கா 272 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்துக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல், ஓரளவுக்கு போராடிய இங்கிலாந்து 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்.,ஆ வெற்றிப் பெற்றது.