லண்டனில் இரவு முழுக்க நீடித்த வன்முறை சம்பவங்கள்… துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து காரணமாக 5 பேர் காயம்!

லண்டனில் நேற்று இரவு பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. (Image: CH SUPT ROY SMITH)

லண்டன் பல இடங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடந்த வன்முறையில் துப்பாக்கியால் சுட்டும், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டும் வன்முறையாளர்கள் தாக்கிக் கொண்டனர். இதில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக மெட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் சட்டவிரோத திடீர் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதும், இளைஞர்கள் அதில் பங்கேற்க அதிக அளவில் கூடுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வடக்கு லண்டன் ஆர்ச்வேயில் நேற்று இரவு திடீரென்று முறையான அனுமதி பெறாமல் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வரவே, இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

பிரிக்ஸ்டன் நடந்த தாக்குதலில் இரண்டு இளைஞர்களுக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது என்று இரவு 7 மணி அளவில் போலீசார் அழைக்கப்பட்டனர். தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு அந்த இரண்டு இளைஞர்களும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மிக மோசமான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் நிலைமை என்ன என்று போலீஸ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இரவு 1.23 மணி அளவில் ஹென்கி போலீசாருக்கு வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்துள்ளது. அங்கு இரண்டு பேருக்கு கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் கிழக்கு லண்டன் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் கிரைடன் பகுதியில் வன்முறைச் சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று வன்முறையை கட்டுப்படுத்திய நிலையில் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயத்துடன் அவதியுற்று வருவதைக் கண்டறிந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த குற்றங்கள் தொடர்பான விரிவான செய்தியை போலீஸ் வெளியிடவில்லை. துண்டு துண்டாக ஒரு சில தகவல்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அது பற்றி போலீல் தெரிவிக்கலாம் என்று மெட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk