சனிக்கிழமை முதல் தெற்கு யார்க்‌ஷையரிலும் 3ம் நிலை கட்டுப்பாடு!

Yorkshire, யார்க்ஷையர், crucial England lockdown, கொரோனா
(Image: independent.co.uk)

லண்டன், அக்டோபர் 21, 2020: கொரோனாத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தெற்கு யார்க்ஷையரிலும் வருகிற சனிக்கிழமை முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் தெற்கு யார்க்ஷையரில் 12 ஆயிரம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜூலை தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் பதிவானதைக் காட்டிலும் இது அதிகம் என்று கூறப்படுகிறது.

கொரோனாத் தொற்று உச்சத்திலிருந்த காலத்தில் ஐ.சி.யு வார்டில் இருந்த நோயாளிகள் எண்ணிக்கையில் பாதி அளவு தற்போது நிரம்பியுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை முதல் தெற்கு யார்க் ஷையரில் 3ம் நிலை மிகத் தீவிரமான கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

மூன்று அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லேபர் கட்சியைச் சேர்ந்த மேயர் டான் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் தெற்கு யார்க்ஷையரின் பார்ன்ஸ்லி, டான்காஸ்டர், ரோதர்ஹாம், ஷெஃபீல்ட் ஆகிய நான்கு உள்ளூர் அதிகாரப் பகுதிகளுக்கும் பொருந்தும். கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அதிகாலை 00.01 முதல் நடைமுறைக்கு வருகிறது.

கிரேட்டர் மான்செஸ்டரில் வெள்ளிக்கிழமை முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தெற்கு யார்க்ஷையருக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு மிகக் கடுமையானது என்றாலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று மேயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த 3ம் நிலை கட்டுப்பாடுகளை அமல்படுத்த நகருக்கு 41 மில்லியன் பவுண்ட் பொருளாதார திட்டம் வழங்கப்படுகிறது.

இதில் 30 மில்லியன் பவுண்ட் தொழில் நிறுவனங்களுக்கும் 11 மில்லியன் பவுண்ட் மருத்துவ உதவிகளுக்கும் செலவிடப்படும். இது தொடர்பாக 10 நாட்களாகப் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

3ம் நிலை கட்டுப்பாடுகள் காரணமாக தெற்கு யார்க் ஷையரில் பப்கள், பார்கள் மூடப்பட்டிருக்கும். வீடுகளில் ஒன்று கலப்பது தடை செய்யப்படுகிறது. பந்தைய கடைகள், வயது வந்தோருக்கான விளையாட்டு மையங்கள், சூதாட்ட விடுதிகள், சாஃப்ட் விளையாட்டு மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஜிம் திறந்திருக்கும்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter