இனி இங்கிலாந்து சாலைகளில் அதிவேகத்தில் பயணிக்கலாம்! – மோட்டார்வே வேக வரம்பு உயருகிறது

ட்டுநர்கள் மத்தியில் அதிருப்தியைப் போக்கவும் சாலை போக்குவரத்து தடையின்றி வேகமாக இயங்கவும் இங்கிலாந்தில் மோட்டார் வே-க்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 6௦ மைல் என்ற அளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது இங்கிலாந்தின் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 50 மைல் என்ற வேகத்தில் பயணிக்க வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது மணிக்கு 80.4 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதி உள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் நீண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளை இங்கிலாந்து நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தற்போது மணிக்கு 60 மைல் வேகம் வரை அதாவது, 96.5 கி.மீ வேகம் வரை வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலை நிறுவனம் இங்கிலாந்தின் முக்கிய ஏ நெடுஞ்சாலைகளில் கடந்த 18 மாதங்களாக இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளது. மணிக்கு 10 மைல் வேகம் அதிகரிப்பு காரணமாக வாக ஓட்டிகள் மற்றும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சாலையில் வாகன ஓட்டிகள் 50 மைல் வேகத்தைத் தாண்டி பயணிக்கும் போது 8 முதல் 16 சதவிகிதம் வரை நேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஏ தலைவர் எட்மண்ட் கிங் கூறுகையில், “அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். மணிக்கு 50 மைல் வேகம் என்பதை விட 60 மைல் வேகம் என்பது பாதுகாப்பானது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக பின்தொடர வேண்டிய நிலை உள்ளது. தற்போது வேகம் அதிகரிப்பு காரணமாக விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும்” என்றார். வாகன ஓட்டிகளும் வேக வரம்பு உயர்த்தப்பட்டும் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நெடுஞ்சாலைகளை அந்த அந்த அரசுகளே பராமரிக்கின்றன. இங்கிலாந்து நெடுஞ்சாலையின் புதிய திட்டத்தை தாங்கள் தற்போதைக்கு பின்பற்றப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk