இங்கிலாந்தின் பல பகுதிகளில் சூறைக் காற்று மற்றும் மழையைக் கொண்டு வந்த அலெக்ஸ் புயல்!

Storm Alex
(Image: PA Media)

லண்டன், அக்டோபர் 2, 2020: அலெக்ஸ் புயல் (Storm Alex) காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் கன மழை மற்றும் சூறைக் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு தீவிரமாகலாம் என்று வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அலெக்ஸ் புயல் காரணமாக தெற்கு இங்கிலாந்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 61 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு இங்கிலாந்து கடல் பகுதியில் அலெக்ஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இது பிரான்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக் கிழமை வரை தென் இங்கிலாந்து, வேல்ஸ்சின் சில பகுதிகளில் கன மழை மற்றும் புயல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸ் புயல் எச்சரிக்கை:

♦  அடுத்த மூன்று நாட்களுக்கு தெற்கு இங்கிலாந்தில் மழை, சூறைக்காற்று இருக்கும்.

♦  இந்த பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

♦  இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

♦  சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கன மழை பெய்யும்.

♦  ஏ354 வேமவுத் சாலை மற்றும் பி3150 ஸ்டெயின்ஃபோர்டு ஹில்ஸ் பகுதியில் கனரக வாகனம் கவிழ்ந்ததாலும் வெள்ளப் பெருக்கு காரணமாகவும் ஏ35 டோர்செஸ்டர் சாலை மூடப்பட்டுள்ளது.

♦  ஸ்வானேஜ் ஹை ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

♦  ஸ்வானேஜ் கடற்பரப்புக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வணிக இயக்குநர் மார்க் நியூபெர்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு தகுந்த பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter