இங்கிலாந்தை நெருங்கும் சூறாவளி குண்டு… வானிலை எச்சரிக்கை

(Image: skymetweather.com)

இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் மிகப் பெரிய வீசப்போகும் புயல் இங்கிலாந்தில் இருந்து 900 மைல் தொலைவில் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை வெதர் பாம் என்று வானிலை நிபுணர்கள் வர்ணித்திருப்பது அதன் ஆபத்தை உணர்த்துவதாக உள்ளது.

இங்கிலாந்து கடற்கரையை கடந்த பிப்ரவரி மாதம் டென்னிஸ் புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து தற்போது எலன் புயல் இங்கிலாந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிக மோசமான புயலாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புயல் காரணமாக தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் 26 அடி வரை அலைகள் எழும்பும் என்றும், மற்ற பகுதி கடற்கரைகளில் 15 அடி வரை அலைகள் எழலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகையில், “வெதர் பாம் என்று சொல்வது சரியான வானிலை தொடர்பான வார்த்தை இல்லைதான். இருப்பினும் அது அடுத்த 24 மணி நேரத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பு அப்படி சொல்ல வைக்கிறது. இது கொண்டுவரப் போகும் அதிகபட்ச மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். நிலம், சாலை, வீடுகள் மழை நீரில் மூழ்கும் அளவுக்கு மழை கொட்டப் போகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம்” என்றார்.

(Image: WINDY)

சமீபத்தில் இங்கிலாந்து பகுதியில் நிலவிய அதிக வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய வானிலை இந்த பகுதியில் குறிப்பிடத்தகுந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக இல்லாத எதிர்பாராத மாற்றாததை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மிகக் கடுமையான காற்று இங்கிலாந்தின் மேற்கு கடற்கரையைத் தாக்க உள்ளது. இதையொட்டி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு தொடங்கும் மழை, புயல் பாதிப்பு வருகிற ஞாயிற்றுக் கிழமை வரை நீடிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 70 மைல் வேகம் வரை காற்று வீசும். கடுமையான தென்மேற்கு காற்று காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ் முழுவதும் மற்றும் தெற்கு ஸ்காட்லாந்து பகுதிகளில் வெள்ளிக்கிழமைகளில் பலத்த காற்று வீசலாம்.

இந்த புயல் மழை காரணமாக இங்கிலாந்தின் கிழக்கு மிட்லான்ட்ஸ், லண்டன், தென் கிழக்கு இங்கிலாந்து, வட மேற்கு இங்கிலாந்து, தென் மேற்கு ஸ்காட்லாந்து, தென் மேற்கு இங்கிலாந்து, லோதியன் எல்லை, ஸ்ட்ராத்க்ளைட், வேல்ஸ் மேற்கு மிட்லாண்ட்ஸ், யார்க்‌ஷேயர் மற்றும் ஹம்பர் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk