இங்கிலாந்தின் பொருளாதாரம் 2024ம் ஆண்டு வரை மீளாது! – நிபுணர்கள்

ங்கிலாந்தின் பொருளாதாரம் கொரோனா பரவலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததை எட்ட இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. பல நாடுகள் எழுந்திருக்கவே பல ஆண்டுகள் ஆகும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் பொருளாதாரம் கொரோனா ஊரடங்குக்கு முந்தைய காலத்திலிருந்த அளவை 2024க்கு முன்னதாக தொட வாய்ப்பில்லை என்று இஒய் ஐடம் பிளப் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பாதிப்பு காரணமாக நாட்டின் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் 3.9 சதவிகிதத்தில் இருந்து ஒன்பது சதவிகிதமாக உயரும். பொருளாதாரம் 11.5 சதவிகிதம் சுருங்கும் எனத் தெரிவித்துள்ளனர். இது கடந்த மாதத்தில் இவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பொருளாதாரம் 8 சதவிகிதம் அளவுக்கு குறையும் என்று கணித்திருந்தனர். தற்போது அதையும் விட மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் எதிர்பார்த்ததை விட அதிக முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் தொழில் முதலீடு குறைய ஆரம்பிப்பது வளர்ச்சியை பாதிக்கும். பொருளாதார மீள்ச்சி என்பது முன்பு கணித்ததை விட கூடுதலாக 18 மாதங்கள் வரை தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இஒய்-ன் தலைமை பொருளாதார நிபுணர் மார்க் ஜார்ஜி கூறுகையில், “யுகே-வின் பொருளாதார வளர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற மிக விசாலமான பார்வையை இந்த தரவுகள் வெளிப்படுத்தியுள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை” என்றார்.

கடந்த வாரம் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆண்டி ஹால்டேன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது, கொரோனா மிகவும் உச்சத்தில் இருந்த மார்ச் மற்றும் ஏப்ரல் காலக்கட்டத்தில் இங்கிலாந்தின் பொருளாதார உற்பத்தி பாதியாக வீழ்ச்சி அடைந்திருந்தது. அது வீ (V) வடிவிலான வீழ்ச்சியாக இருந்தது. பொருளாதார மீட்சி மிக விரைவானதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்ததார். ஆனால் தற்போது பொருளாதார பதிப்பு மீள நாட்கள் ஆகும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவது சற்று கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk