இங்கிலாந்திலும் பயங்கரவாத செயல் நடக்கலாம்! – ப்ரீத்தி பட்டேல் எச்சரிக்கை

threat level, raises, பயங்கரவாத, ப்ரீத்தி பட்டேல்
(Image: wikimedia commons)

பிரான்ஸ், ஆஸ்திரியாவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறலாம் என்று உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேல் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய கேலி சித்திரத்தை வகுப்பறையில் மாணவர்களிடம் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுக்கு நேரடியாக சில அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளன.

ஆஸ்திரியாவில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பயங்கரவாத சம்பவம் இங்கிலாந்திலும் நடக்கலாம் என்றும் உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேல் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜாயின்ட் டெரரிசம் அனாலிசிஸ் சென்டர் பரிந்துரை அடிப்படையில் நான்காம் நிலையான சிவியர் (தீவிர) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து முழுவதுக்கும் மிகத் தீவிர பயங்கரவாத எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ப்ரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “எந்த ஒரு மிரட்டல் அடிப்படையிலும் இங்கிலாந்து இந்த முடிவை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகத்துக்குரிய வகையிலிருந்தால் அது பற்றி உடனடியாக போலீசில் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு 2017ம் ஆண்டு மான்செஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில் இங்கிலாந்தில் கிரிட்டிகிள் எனப்படும் மிக தீவிர பயங்கரவாத அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன் பிரிட்ஜ் தாக்குல் நேரத்தில் தீவிர எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் பயங்கரவாத தீவிர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 2ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter