ஜெஸிகா கொலை வழக்கு… கருமுட்டையை பாதுகாத்து வைத்த கணவன்! – அதிர்ச்சி தகவல்!

Jessica Patel
(Image: Cleveland Police / SWNS.COM)

டந்த 2018ம் ஆண்டு மிடில்ஸ்பரோவில் நடந்த மருந்தாளுநர் ஜெஸிகா படேலின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் இந்த பெண்ணை கொல்ல எப்படி அவரது கணவனுக்கு மனது வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த கொலை தொடர்பாக பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளிப்பட்டு வருகிறது. கே காதலனுடன் வாழ, ஜெஸிகாவின் கருமுட்டையை மித்தேஷ் சேகரித்து வைத்தது தெரியவந்துள்ளது. இந்த கொலையை கௌரவக் கொலையாக அறிவிக்க வேண்டும் என்று ஜெஸிகா படேலின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு வடக்கு இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 34 வயதான ஜெஸிகா பட்டேல் தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் ஆய்வு நடத்தியபோது, கணவனே ஜெஸிகாவை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், ஐந்தாண்டுகளாக ஜெஸிகாவை கொல்ல கணவன் மித்தேஷ் பட்டேல் திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

ஓரின சேர்க்கையாளரான மித்தேஷ், தன்னுடைய ஆண் காதலனுடன் ஆஸ்திரேலியாவில் சென்று குடியேறத் திட்டமிட்டிருந்தார். இதற்கு இடையூறாக இருந்த ஜெஸிகாவை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளான். ஜெஸிகா இறந்துவிட்டால் கிடைக்கும் இரண்டு மில்லியன் பவுண்ட் ஆயுள் காப்பீடு பணத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறி சந்தோஷமாக தன்னுடைய காதலனுடன் வாழலாம் என்று மித்தேஷ் நினைத்திருந்தான்.

மிதேஷ் படேல்
மித்தேஷ் படேல் (Image: Cleveland Police / SWNS.COM)

பிரச்னை தெரியாமல் கொலை செய்வது எப்படி என்று ஐந்தாண்டுகளாக வீடியோ பார்த்து வந்துள்ளான். பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்து ஜெஸிகாவை யாரோ வெளியில் இருந்து வந்த நபர் கொலை செய்துவிட்டதாக நாடகமாடிய விஷயம் அவனுடைய ஐபோனை ஆய்வு செய்தபோது தெரியவந்தது. ஜெஸிகா கொலைக்குப் பிறகு அவன் நடந்துகொண்ட விதத்தை அவனுடைய மொபைலில் இருந்த ஹெல்த் அப் பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் எழுந்த சந்தேகத்தில் விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது. இந்த கொலை தொடர்பாக மித்தேஷ்க்கு 30 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக 74 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த கொலை தொடர்பாக பல விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  ஜெஸிகாவை கொலை செய்வதற்கு முன்பு, ஜெஸிகாவின் சிணை முட்டையைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளான். ஜெஸிகா இறந்த பிறகு அந்த கரு முட்டை மூலம் குழந்தை பெற்று அதை தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வளர்க்கலாம் என்று மித்தேஷ் திட்டமிட்டிருந்ததான்.

மிடில்ஸ்பரோவுக்கு அவர்கள் குடியேறியதே ஜெஸிகாவையும் அவரது பெற்றோர் குடும்பத்தையும் பிரிக்கத்தானாம். ஜெஸிகாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால், மித்தேஷ்க்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த நிலையில் குழந்தையின்மைக்கான சிகிச்சையை ஜெஸிகா எடுத்து வந்துள்ளார். அப்போதுதான் மித்தேஷ் தன்னுடைய விந்தணு எண்ணிக்கை குறைவதற்காக மாத்திரை எடுத்து வந்தது தெரியவந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி ஜெஸிகாவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளான் மித்தேஷ். கொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றதாக ஜெஸிகா தன்னுடைய சகோதரியிடம் கூறியுள்ளார். இந்த ஆய்வறிக்கையில் குடும்ப வன்முறையைத் தடுக்க ஏழு பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk