மூன்றடுக்கு பகுதிகள் பற்றி கிறிஸ்துமசுக்கு முன்பாக மறுஆய்வு செய்யப்படும்! – பிரதமர் உறுதி

system reviewed weeks, மறுஆய்வு, கொரோனா

எந்த பகுதிக்கு என்ன நிலை கட்டுப்பாடு என்பது குறித்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக டிசம்பர் 16ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

மூன்றடுக்கு கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து எந்த எந்த பகுதிகளில் என்ன கட்டுப்பாடு என்பது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் இன்று அறிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தற்போது கொண்டு வரப்படும் கடுமையான விதிகள் இங்கிலாந்தில் சமநிலையை எட்ட உதவும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தலாம். உங்கள் பகுதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உங்கள் விதி இல்லை. அது ஒவ்வொரு பகுதியும் தப்பிப்பதற்கான வழிகள்.

ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்.

முதல் மறுஆய்வு டிசம்பர் 16ம் தேதி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கிறிஸ்துமசுக்கு முன்பாகவே ஒரு பகுதியில் அடுக்கு நிலை மாறும் வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்தில் கொரோனா நோய்ப் பரவல் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் அது புத்தாண்டு தருணத்தில் மேலும் ஒரு தேசிய முழு ஊரடங்குக்கு வழிவகுத்துவிடும்.

அனைத்து அடுக்குகளிலும் கட்டுப்பாடுகள் கடினமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. முந்தைய கட்டுப்பாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை.

எனவே, ‘ஆர்’ விகிதத்தை மிகப்பெரிய அளவில் குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்தும் கடின உழைப்பு காரணமாகவும் லிவர்பூல் நகரம் மிகத் தீவிர 3ம் நிலையிலிருந்து தற்போது மிக விரைவாக தீவிர 2ம் நிலைக்கு இறங்கியுள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter