Coronavirus: சீனாவில் இருந்து வரும் விமானங்களை டெர்மினல் 4க்கு தனிமைப்படுத்தும் பிரிட்டன்

சீனாவில் வுஹான் மாகாணத்தில் ’கொரோனா’ என்ற வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

புதர்களில் மறைந்திருந்து புகைப்படம் எடுத்த ஊடகத்தினர் – நோட்டீஸ் அனுப்பி ஹாரி எச்சரிக்கை

இது மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியது. சளி, இருமல் போன்றவை தான் அறிகுறிகள் ஆகும். வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் சுகாதாரத்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சீனாவில் அடுத்த ஆண்டு புத்தாண்டு பிறக்க உள்ளது.

இதையொட்டி அந்நாட்டில் இருந்து 1.4 பில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. எனவே ’கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதும் பரவும் சூழல் ஏற்படக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவில் வுஹான் மாகாணத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.

எனவே சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சீனாவிலிருந்து வரும் விமானங்களை இங்கிலாந்து கண்காணிக்க உள்ளது.

இங்கிலாந்தில் கடைசி நிகழ்ச்சி – மகுடத்தை துறந்து கனடா பறந்த ஹாரி

சீனாவில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும் டெர்மினல் 4ல் தரையிறக்கப்படும். வந்திறங்கும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக பரிசோதிக்க ஒரு சுகாதார குழு அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் இங்கிலாந்தில் பரவலாம் என்ற அளவுகோல் “மிகக் குறைவானது” என்பதிலிருந்து “குறைந்தது” என்று இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.